சூப்பர்டா’, ’கலக்குற சந்துரு’ , ’கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம்’, படங்களில் நாயகியாக நடித்தவர் புவனா. சென்னை தசராபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிர மணியம். இவரது மனைவி சம்பூர்ணம். இவர்களது மகள்தான் புவனா.
புவனாவின் சொந்த ஊர் கோவையை அடுத்த அன்னூர் ஆகும். புவனாவிற்கு அன்னூரில் ஒரு தியேட்டரும், 2 வீடுகளும் உள்ளன. வீடுகளை தென்னம் பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவருக்கு ரூ. 50 லட்சத்திற்கு விற்பனை செய்தார். பின்னர் சென்னை அண்ணா நகரை சேர்ந்த வேலப்பன் மகன் சுப்பிரமணியத்துக்கு தியேட்டரை விற்க முயன்றார்.
உங்கள் வீட்டோடு தியேட்டரையும் நாங்கள் தான் வாங்கியுள்ளோம் என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் சுப்பிரமணியம் நடிகை புவனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்து நடிகை புவனா அன்னூர் போலிசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை மிரட்டிய 5 பேரையும் தேடி வருகிறார்கள்.