நடிகர் சங்கத்துக்கு ஜுன் மாதம் தேர்தல்
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற ஜுன் மாதம் தேர்தல் நடத்துவது என்று செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளை சேர்ந்த நடிகர்-நடிகைகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். சேலம், மதுரை, கரூர், நாமக்கல், திருச்சி ஆகிய ஊர்களை சேர்ந்த நாடக நடிகர்கள் உள்பட மொத்தம் 1,700 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
3 வருடங்களுக்கு ஒருமுறை தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடைபெறும்.
எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், அஞ்சலிதேவி, நாகேந்திரராவ், ராதாரவி, விஜயகாந்த் ஆகியோர் நடிகர் சங்க தலைவராக பதவி வகித்து இருக்கிறார்கள்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம், அதன் தலைவர் சரத்குமார் தலைமையில் நடந்தது. அப்போது, 2012-2015-ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை வருகிற ஜுன் மாதம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இப்போது நடிகர் சங்க தலைவராக சரத்குமார் இருந்து வருகிறார். துணைத் தலைவர்களாக மனோரமா, விஜயகுமார், பொதுச்செயலாளராக ராதாரவி, பொருளா ளராக வாகை சந்திரசேகர் ஆகியோர் இருந்து வருகிறா ர்கள்.
வருகிற தேர்தலில் யார்-யார் போட்டியிடுவார்கள் என்ற விவரம் இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.