மாஜி மேயர் கணவரிடம் போலீசார் விசாரணை
மதுரை முன்னாள் மேயர் தேன்மொழியின் கணவர் கோபிநாதன். அவர் குடியிருக்கும் ஜெயந்திபுரம் பகுதியில் இடதகறாறு ஏற்பட்டதில் சுப்பிரமணி என்பவரை அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் ஜெயந்தி புரம் போலீசார், விசாரணைக்காக கோபிநாதனை அழைத்துச் சென்றனர். தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். அவரை விடுவிக்க உயர் அதிகாரிகள் உத்தரவு வந்தபின்னரே முடிவு செய்யப்படும் ஜெயந்திபுரம் போலீசார் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.