‘முதல்வன்’ படமெடுத்த ஊர் :
அச்சத்தில் உறைந்த குடியிருப்பு வாசிகள் ( படங்கள் )
நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆனையூர் கிராம வாசிகள் தங்களின் வீடுகள் விரிசல் கண்டு பிளந்து கிடப்பதைப் பார்த்து அச்சத்திலும் பீதியிலும் உறைந்து போய்க்கிடக்கிறார்கள்.
வீடுகளில் விரிசல் என்றால் பூகம்பமா? நில அதிர்வா? அதுவல்ல மலைக்கொள்ளையர்கள் தான் காரணம் என்கிற ஆனையூர் கிராம வாசிகளான லட்சுமி,அன்னத்தாய்,கிருஷ்ணம்மாள் போன்றவர்கள் நிகழ்வுகளைச் சொன்னது அதிரவைக்கும் விஷயம்.

எங்கள் கிராமத்தைச் சுற்றியுள்ள மலைகளிலிருந்து கிரைண்டர்,சாலை விரிப்புக்கான ஜல்லிக்கற்கள்,கட்டுமானத்திற்கு என கற்களைப் பெயர்த்து எடுக்கிறார்கள் இரவு வேளைகளில் சக்தி வாய்ந்த வெடி மருந்துகளைப் பயன்படுத்தி வெடிக்கச் செய்வதால் அதிரும்படியான இடி போன்ற சப்தத்துடன் பறைகள் வெடித்துச் சிதறுகின்றன.
இவை வெடிக்கும் போது பூமியே பூகம்பம் வந்து போன்று அதிருது அந்த அதிர்வில் மலைப்பக்கமுள்ள எங்களின் வீடுகளில் விரிசல்கள் கண்டு பிளந்து வீடுகின்றன. அடிக்கடி இரவு நேரங்களில் மலைகளில் வெடி வைத்து தகர்ப்பதால் தொடர்ந்து ஏற்படும்.
விரிசல்களால் வீடுகளில் மேற் கூரைகள்,சுவர்கள் ஸ்லாப்கள் பெயர்ந்து விழுந்துறுச்சு ராவுவேளைல வீடுகளில் தங்கவே அச்சமாக இருக்குய்யா பின்ளைகள் குடும்பம் உயிரோடு சமாதியாகி விடுவோமோ என்கிற பீதியில் தவித்துக் பொண்டிருக்கிறோம்.
தெரிவிக்க வேண்டியவர்களுக்குத் தெரிவித்தும் பயனில்லை ”நக்கீரன்“ பத்திரிகையான உங்களிடம் தான் எங்களின் பாதுகாப்பு உள்ளதுய்யா. நாங்க அவ்வளவா வெவரம் தெரியாத ஜனங்க. காப்பாத்துங்க சேலைத்தலைப்பால் கண்ணீலைத் துடைத்தபடி கேவி அழுதார்கள்.

முந்தூறுக்கும் மேற்பட்ட மக்களும்,150 ஜயும் தாண்டிய வீடுகளைக்கொண்டது ஆனையூர் கிராமத்தின் அத்தனை மக்களும் திசைரிக் கூலியைக் கொண்ட அன்றாடம் காய்ச்சிகள் மலைகளாலுழ் மரங்களாலும் இயற்கைத் தாய் கொடுத்த அருட் கொடையால் சூழப்பட்ட பூமி ஆனையூர் இரட்டை வெற்றி கண்ட டைக்டர் ஷங்கர் தன்னுடைய முதல்வன் படத்தின் ஒருபகுதியான,

அர்ஜீன் முதல்வரான போது,தனது காதலி மனிஷா கொய்ராலாவுக்காக,தான் தொடர்பு கொள்ளும் வகையில் வடிவேலுவிடம் செல்போன் ஒன்றைக் கொடுத்தனுப்புவார். அதைக் கிராமத்திலுள்ள மனிஷாவிடம் கொடுப்பதற்காக வடிவேலு டூவீலரில் வருவார். அந்த இடம் தான் ஆனையூர் வனப்பகுதி.
சினிமா புள்ளிகளின் கவனத்தைத் தன்வசம் வைத்திருக்கும் இந்தக் கிராமத்தில் மலைவளமும், கனிமங்களும் நிறைந்து கோரிக்கையற்றிருப்பதால் மலைக் கொள்ளையர்கள் சும்மா விடுவார்களா ? மலையை களவாடத் தொடங்கி விட்டார்கள்.

எலி வளை என்றாலும் தனிவளை வேண்டும் வாயைக் கட்டி வயிற்றைக்கட்டி பெண்டு பிள்ளைகளோடு குந்துவதற்காக வீடுகளைக்கட்டிக் குடியமர்ந்த அந்த அப்பாவி மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் சவாலாகவே உருமாறத்தொடங்கி விட்டார்கள் இந்த மலைக் கள்வர்கள்.
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்குமா முடிச்சு என்ற எண்ணம் யோசிக்க வைக்கும். ஆனால் அதுதான் இங்கே அப்பட்டமான நிஜம்.
சாலை விரிப்புக்கான கற்கள் கட்டுமாகப்பணிக்கென்று ஜல்லி உடைப்பு ஆகியவைகளுக்கான கிரஷ்ஷர் இந்தக்கிராமப் பகுதியிலும் வெளியிடங்ளிலும் உண்டு அவைகளுக்குத் தேவையான கற்களை இந்த மலையிலிருந்து வெட்டி எடுத்துக்கொள்ளலாம் என அரசின் கனிமவளத்துறை கிரஷ்ஷர்கார்ர்களுக்கு அனுமதி அளித்த்து. பாறைகளை வெட்டி யெடுக்க பிளப்பதற்காக இவர்கள் ஆழ்துளைக் குழிகள் போட்டு அளவுக்கதிகமான வெடிமருந்துகள் டெட்ட ணேட்டர்களைப் பயன்படுத்தி வெடிக்கச் செய்வர்.
இப்படி மலைகளையும்,தரைப்பகுதியையும் பிளப்பதால்,இயற்கைவளம் கொள்ளை போவ தோடு சுற்றுப்புறச் சூழலும் மாசுபடுகிறது. இயற்கை வளத்தைக்காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றதால் அரசும் அனுமதியை ரத்து செய்த்து. ருசி கண்டவர்கள் விடுவார்களா?.
வருவாய்த்துறை,காவல்துறை கனிமவளத்துறை மும் மூர்த்திகளையும் தங்களின் பாக்கெட்டிற்குள் வைத்துக் கொண்டு சட்டத்தையும் விதியையும் மீறத் தொடங்கிவிட்டார்கள்.
அமெரிக்காவிற்கே அதிபரானாலும் அப்பளத்தை அப்படியே சாப்பிடமுடியுமா?. வெடிவைத்து தகர்க்காமல் மலையைக் கொள்ளையிடவா முடியும்.
இரவு வேளைகளிலும், கிலோ கணக்கில் வெடிமருந்து டெட்டனேட்டர்தளைத் திணித்து வெடிக்கச் செய்வதால், பூமியே பிரிளக்கம் படியான பூகம்ப அதிர்ச்சி யோடு பாறைகள் வெடித்துச் சிதறு கின்றன.அவசர அவசரமாக பாறைகள்
ஜே.சி.பி.கொண்டு அள்ளப்பட்டு விடிவதற்குள் 20க்கும் மேற்பட்டலாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.

வாடிக்கையாகிப் போன இந்தக் கொள்ளைக்காக அன்றாடம் வெடிவைத்து பிளப்பது சகஜ மாகிவிட்டதால்,100க்கும் மேற்பட்ட டெசிபல் ஒசை கிளப்பும் அதிர்வு, அருகில் உள்ள மக்களின் குடியிருக்கும் வீடுகளில் விரிசலை ஏற்படுத்தி பிளவையும் உண்டாக்கி விட்டது அதோடு மலைப்பிளவின் போது பறக்கும் பாறைகளும் குடியிருக்கும் வீடுகளையும் மக்களையும் தாக்கும் ஆபத்துவேறு அவர்களை உயிர்பயத்தில் தள்ளியிருக்கிறது.
நித்திய கண்டம் பூர்ண ஆயுசு என்கிற மாதிரி உறக்கத்தைத் தொலைத்து விட்டு உயிரைக் கையில் பிடித்தபடி பரிதவிக்கிறோம் என்பதே ஆனையூர் வாசிகளின் அச்சமாக உள்ளது.
இந்த அச்சம் இலர்களோடு மட்டுமல்ல 20க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கான மானுர் கூட்டுக்குடிநீர்த்திட்டத்தின்படி குடி தண்ணீர் வழங்கிக் கொண்டிருக்கும் சுமார் 78.10.லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பெரிய நீர்த்தேக்கப் பகிர்மான உயர் அழுத்த நீர்த் தேக்கத் தொட்டியும் மலையோரம் அமைக்கப்பட்டிருப்பதால்,தகர்க்கப்படும் அதிர்வு இதிலும் விரிசலை ஏற்படுத்திவிட்டது.
மலைக் கொள்ளை தடுக்கப்படா விட்டால் ஆனையூர் வாசிகளின் உயிரும் உடைமைகளும் பஞ்சாய் பறந்துவீடும் என்ற அபாய மணியையும் அடித்து விட்டார்கள் ஆனையூர் வாசிகளின் மணியோசை அதிகாரமையத்திற்கு எட்ட வேண்டுமே?.
செய்தி:பரமசிவன்
படங்கள்:ராம்குமார்