குஜராத்தை தொடர்ந்து மும்பையிலும் நிலஅதிர்வு
குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் மிதமான நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்க திறன் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து உடனடித் தகவல் ஏதும் வெளிவரவில்லை.
குஜராத்தை தொடர்ந்து மும்பையிலும் மிதமான நில அதிர்வு உணரப்பட்டது. மராட்டியத்தின் சதாரா, புனே உள்ளிட்ட இடங்களிலும் நிலஅதிர்வு ஏற்பட்டது. நாசிக், நவிமும்பை, ரத்தினகிரி, சோலாபூர் உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது.