குழந்தையிடம் பாலியல் தொல்லை : வாலிபர் கைது
சேலம் மாநகரில், உள்ள ஜவகர் மில் பகுதியில் உள்ளது பெரியேரி வயக்காடு. இந்த பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் இவரது மனைவி தனலட்சுமி இவர்களுக்கு மூன்று வயதில் பெண்குழந்தை உள்ளது.
நெசவு தொழிலாளியான தனசேகரன் வேலைக்கு சென்று விட்டு நேற்று மதியம் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது, அவருக்கு சாப்பாடு போட மனைவி தனலட்சுமி வீட்டுக்குள் சென்று விட்டார்.
அப்போது, பிரகாஸ் என்பவரின் வீட்டிலிருந்து குழந்தை யின் அழுகுரல் கேட்டுள்ளது. அந்த வீட்டுக்கு போன தனலட்சுமி குழந்தையை கூப்பிட்டுளார். ஆனால், குழந்தையின் அழுகை சத்தம் மட்டும் பலமாக வந்துள்ளது. சந்தேகப்பட தனலட்சுமி பலமாக கூச்சல் போட்டுள்ளார். அவரது கூச்சல் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் பிரகாசின் வீட்டு முன்பு திரண்டு விட்டனர்.
அப்போது கதவை திறந்த பிரகாஸ் வேகமாக வெளியே ஒடியிருக்கிறான். சந்தேகப்பட்ட சிலர் அவனை துரத்தி பிடித்துள்ளனர். இதற்கிடையில் அழுதுகொண்டிருந்த குழந்தையை எடுத்து பார்த்தபோது, அந்த குழந்தைக்கு பிரகாஸ் “பாலியல்” தொல்லை கொடுத்திருப்பது தெரிந்துள்ளது.
இது தெரிந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமகள் பிரகாசை அடித்து உதைத்து பள்ளபட்டி போலீசில் ஒப்படைத்தனர். குழந்தையின் தாயார் தனலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் பிரகாசை கைது செய்துள்ளனர்.