அண்மைச் செய்திகள்
களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா! || இப்போதைக்கு சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லை! || ஜம்மு : நில அதிர்வால் 60 ஆயிரம் வீடுகள் சேதம் || சீமான் மீது வழக்குப்பதிவு || நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி || வருண்காந்திக்கு பொறுப்பு : ராஜிநாத் சிங் அறிவிப்பு || ஹிலாரி கிளிண்டனை ‘அந்த’ இடத்தில் துப்பாக்கியால் சுட வேண்டும்: ரேடியோ தொகுப்பாளரின் சர்ச்சை பேச்சு || திருப்பதியில் தரிசனத்துக்கு 17 மணி நேரம் காத்திருப்பு || மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது || 38 ரன்கள் வித்தியாசத்தில் புனே வெற்றி || சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி || கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம் || கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த் ||
வியாழக்கிழமை, 12, ஏப்ரல் 2012
ராவணனுக்கு 15 நாள் காவல் நீட்டிப்பு
......................................
தெற்கு ரயில்வேக்கு 5,568 கோடி வருமானம்!
......................................
தவறி விழுந்தவரை மீட்கச் சென்ற 5 பேர் கிணற்றில் சிக்கி தவிப்பு
......................................
ராஜஸ்தான் முதல்வருக்கு எதிராக 22 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி
......................................
தனுஷ் மீது ராக்கி சாவந்த் பாய்ச்சல்
......................................
கர்ப்பிணி மனைவி எரித்து கொலை
......................................
உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது ஷூ வீச்சு
......................................
விஜயகாந்த் வாகனத்தை முற்றுகையிட்ட பெண்கள்
......................................
கேட்பதற்கே ரொம்ப கஷ்டமாயிருக்கு: சொந்த தொகுதியில் விஜயகாந்த் பேச்சு
......................................
அரசியலில் என்னை அக்யூஸ்ட்டாக பார்க்கிறார்கள் ; சீமான் பேச்சு
......................................
ஸ்டாலின் நெல்லை செல்கிறார்
......................................
சென்னை சூப்பர்கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
......................................
பெட்ரோலுக்கு பதில் மாற்று எரிசக்தி : அப்துல்கலாம் பேச்சு
......................................
சென்னை மாநகராட்சி புதிய கமிஷனர்
......................................
குஜராத் இனக்கலவரம்: 18 பேருக்கு ஆயுள்
......................................
பாக்., சிறையிலிருந்து 26 இந்தியர்கள் விடுவிப்பு
......................................
ஏர் இந்தியாவுக்கு புதிய விமானங்கள்: அஜித் சிங்
......................................
உலக அளவில் தோல்வியடைந்த மோனோ இரயில் திட்டத்தை கைவிட வேண்டும்: ராமதாஸ்
......................................
எம்.என்.நம்பியார் மனைவி ருக்மணி இறுதிச்சடங்கு
......................................
உதவி கமிஷனர் என்னிடம் தவறாக நடந்தார் : நடிகை தாரா பரபரப்பு புகார்
......................................
சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் புதுக்கோட்டைக்கு மாற்றம்
......................................
அஜ்மல் கசாப்புக்கு 25 கோடி ரூபாய் செலவு
......................................
இந்தியா வல்லரசாகும் : அப்துல் கலாம் பேச்சு
......................................
26ஆம் தேதி வரை திவாகரனை சிறையில் அடைக்க நீடாமங்கலம் நீதிமன்றம் உத்தரவு!
......................................
ஓ.பி.எஸ். மனைவிக்கு சிகிச்சை: சட்டசபையில் அதிமுக - தேமுதிக கடும் வாக்குவாதம்
......................................
என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஆவடி எம்எல்ஏதான் காரணம்! அதிமுக பிரமுகர் புகார்!
......................................
கிருஷ்ணகிரி: அடுத்தடுத்து வந்த 5 வாகனங்கள் மோதல். 2 பேர் பலி. (படங்கள்)
......................................
ராமஜெயம் கொலை வழக்கில் மதுரை ரவுடி கைது?
......................................
பாருங்கள்... பயணிகளின் நிழற்குடை! (படம்)
......................................
இந்தோனேஷியா: நில நடுக்கத்தில் 5 பேர் பலி
......................................
பத்திரிகையாளர் மா.முருகன் மறைவு! நக்கீரன் குடும்பத்தினர் கண்ணீர் அஞ்சலி!
......................................
கிருஷ்ணகிரி: சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்
......................................
சசிகலா வழக்கு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு
......................................
கசாப்புக்கு 25 கோடி ரூபாய் செலவு
......................................
அஞ்ச மாட்டேன்: வீரபாண்டி ஆறுமுகம்
......................................
அச்சுதானந்தனுக்கு மா.கம்யூ., தடை?
......................................
காவிரி நதிநீர் தீர்ப்பாயத் தலைவர் ராஜினாமா
......................................
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு கொலை மிரட்டல்! போலீஸ் கமிஷனரிடம் புகார்!
......................................
100 வது ஆண்டு விழா! புதுக்கோட்டை நகராட்சிக்கு ரூ 50 கோடி சிறப்பு நிதி! ஜெ. அறிவிப்பு!
......................................
வனயுத்தம் படத்தை வெளியிட இடைக்கால தடை! சென்னை கோர்ட்டு உத்தரவு!
......................................
சர்க்கரை ஆலை பணியாளர்கள் போராட்டம்
......................................
ஹெல்மட் அணியாத போலீசாருக்கு அபராதம்: பெண் போலீசார் நிறையபேரிடம் வசூல்
......................................
சென்னையில் பின்னோக்கி வந்த லாரி: பிளாட்பாரத்தில் தூங்கிய 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்
......................................
ரூ. 1 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்: இலங்கைக்கு கடத்த முயற்சி
......................................
தேனி அருகே பஸ் வேன் மோதல்: 5 பேர் பலி
......................................
கிருஷ்ணகிரி: அடுத்தடுத்து வந்த 5 வாகனங்கள் மோதல். 2 பேர் பலி. 13 பேர் படுகாயம்
......................................
தமிழர் பகுதியில் சிங்களவர் குடியேற்றம்: இந்திய குழு சிங்கள நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும்: ஸ்ரீதரன்
......................................
சென்னையில் நிலநடுக்கம் ஏன்? வானிலை அதிகாரி விளக்கம்
......................................
சுனாமி குறித்து அச்சம் ùதேவையில்லை: ஜெயலலிதா அறிக்கை
......................................
சென்னை பல்கலையில் விஷம் குடித்த மாணவர் உயிரிழந்தார்: காதல் தோல்வி என தகவல்
......................................
சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரி திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
......................................
தந்தையால் சித்ரவதை செய்யப்பட்ட 3 மாத குழந்தையின் உயிர் பிரிந்தது: தந்தை மீது கொலை வழக்கு பதிவு
......................................
குஜராத்தில் நீதிபதியை நோக்கி செருப்பு வீசிய குற்றவாளி கைது
......................................
ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் மின்னணு முறையில் கணக்கு தாக்கல் செய்வது கட்டாயம்
......................................
அரியானா மாநிலத்தின் விளையாட்டு தூதராக பெயஸ் நியமனம்
......................................
இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவதே லட்சியம்: யுவராஜ்சிங்
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 12, ஏப்ரல் 2012 (9:13 IST)




தமிழர் பகுதியில் சிங்களவர் குடியேற்றம்: இந்திய குழு சிங்கள நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும்: ஸ்ரீதரன்


தமிழர்கள் பகுதியில் சிங்களவர் குடியேற்றம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கூறினார். இலங்கை வரும் இந்திய எம்.பி.க்கள் குழு, சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலைத் தவிர்த்து சுதந்திரமாக தமிழர் பகுதிகளைப் பார்வையிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

"இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலை' என்ற தலைப்பில் மதுரை வழக்குரைஞர் சங்கத்தில் புதன்கிழமை (11/04/2012) அவர் பேசியதாவது:

அகிம்சை வழியிலும், ஆயுதம் ஏந்திய வழியிலும் இலங்கையில் தமிழர்கள் நடத்திய போராட்டத்தில் 3 லட்சம் மக்களும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் நிகழ்ந்த கடைசிக் கட்ட போரில் மட்டும் 1.40 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். போர் முடிந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தமிழ் மக்கள் இன்னும் முள்வேலிச் சிறைகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.


தமிழர் பகுதியில் சிங்களவர்கள் குடியேற்றம் செய்வது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ராணுவ முகாம்களை அமைத்து தமிழ் மக்களின் சுதந்திரமான நடவடிக்கைகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.



இரண்டாம் தர, மூன்றாம் தரக் குடிமக்களாக தமிழர்கள் நடத்தப்படுகின்றனர். இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகள்தான் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக இருந்தன. அதற்கான அடையாளங்களையே அழிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கிறது.


திரிகோணமலை பகுதியில் 22 சதவீதமாக இருந்த சிங்களவர், முஸ்லிம்களின் மக்கள்தொகை தற்போது 72 சதவீதமாக உயர்ந்துள்ளது. அம்பாரத்துறை பகுதியில் 21 சதவீதமாக இருந்த சிங்களவர் மக்கள்தொகை தற்போது 90 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.


இறுதிப் போர் நடந்த முல்லைத் தீவு, முள்ளிவாய்க்கால் பகுதிகளில் மீண்டும் தமிழர்கள் குடியேற அனுமதி மறுக்கப்படுகிறது. சிங்கள ராணுவத்தின் கொலைவெறித் தாக்குதல், இன அழிப்பு உலகுக்கு தெரியவந்துவிடும் என்பதால், அப் பகுதியில் குடியேற்றத்தை தடுத்து வருகிறது.


ஜெனீவா தீர்மானம் இலங்கைத் தமிழ் மக்களுக்கு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கைத் தமிழர்களுக்கு சுதந்திரம், சம உரிமை கிடைக்கும் என்றால், அது தமிழகத்தில் இருந்து கொடுக்கப்படும் அழுத்தத்தின் காரணமாகவே வழங்கப்படும் என்ற நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது.

 தமிழக மக்களின் ஒட்டுமொத்த குரலும் ஓங்கி ஒலித்ததன் காரணமாகவே, ஜெனீவா தீர்மானத்துக்கு இந்திய அரசு ஆதரவு தெரிவித்திருக்கிறது. இலங்கைத் தமிழர் பிரச்னையில் இந்திய அரசு கொள்கைரீதியான மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் காண முடிகிறது. தமிழக மக்களின் உணர்வுப்பூர்வ நடவடிக்கைகள் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.


 ஜெனீவா தீர்மானத்தின் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்னை சர்வதேச சமூகத்தின் பார்வைக்குச் சென்றிருக்கிறது. இருந்தபோதும், தமிழர் பகுதியில் இருந்து ராணுவத்தை முழுமையாக வெளியேற்றுவது, இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தர அரசியல் தீர்வு, கொல்லப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க பொது விசாரணை என்பதெல்லாம் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்து வருகிறது. இது இந்தியாவுக்குத்தான் குறிப்பாக தமிழகத்துக்கு ஆபத்தாக இருக்கும். யாழ்ப்பாணம் அருகே மாகல் என்ற இடத்தில் சீனா காற்றாலை அமைத்து வருகிறது. ஆனால், அங்கிருந்து 3 விநாடிகளில் கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் தாக்க முடியும் என்கின்றனர். இவ் விஷயத்தில் இந்தியா கவனமாக இருக்க வேண்டும்.


இலங்கை வரும் இந்திய எம்.பி.க்கள் குழு, சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலைத் தவிர்த்து சுதந்திரமாக தமிழர் பகுதிகளைப் பார்வையிட வேண்டும். அப்போதுதான் தமிழர்களின் உண்மை நிலை தெரியவரும் என்றார்.



   


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : kalai Date :4/13/2012 6:11:13 AM
இலங்கை போகும் இவர்கள் சிங்களவனின் நிகழ்ச்சி நிரலுக்குத்தான் செயல்படுவார்கள்.இவர்கள் மட்டுமல்ல ஒபாமா வந்தாலும் அதேதான்.தன் குற்றத்தை எந்த வழியிலும் மறைத்து நல்ல அபிப்பிராயம் தேடுவதில் சிங்களம் முயற்சிக்கும்.செல்வி ஜெ.சொன்னதுபோல இது ஒரு கண்துடைப்பு பயணம்.பக்ஷே சகோதரர்கள் ஒரு நடிப்பு மேதைகள் என்று தமிழனுக்கு தெரியும். செல்வி ஜெ.செய்தது ஒரு நல்ல விஷயம்.
Name : T.Sinnarasa, Germany Date :4/13/2012 1:01:36 AM
அதிமுக டாக்டர் மத்திறேயன், திருச்சி சிவா, D.ராஜா (comunist Party), வைகோ போன்றவர்கள் மேற்படி குழுவில் இடம்பெறவேண்டும்.
Name : arul Country : United Kingdom Date :4/12/2012 12:47:15 PM
இது 100 % உண்மையான செய்தி.தயவு செய்து அவர் சொன்னபடி செய்தால் மிகவும் நல்லது.அன்ன இது நடக்கும் என்று நான் நினைக்கவில்லை.எப்படியும் அங்கு போய் நல்ல விருந்தில் கலந்து வருவார்கள் என்று நினைக்கிறேன் .ஜெயலலிதா நல்ல முடிவு என்று நினைக்கிறேன் .என்றாலும் அதுவும் கொஞ்சம் குழப்பமாக தான் இருக்கிறது.கண்டிப்பாக போக வேணும்.ஆனால் திட்டத்தை வித்தியாசமாக போட்டு தமிழர் பகுதிக்கு போக வேண்டும்