சினிமா ஆசை காட்டி பெண்களை விபசாரத்தில் தள்ளிய பிரபல நடிகை கைது





பிரபல தெலுங்கு நடிகை தாரா சவுத்ரி. அத்ருஸ்யம், ரக்ஷாகுடு, பிரியசகி, லவ் டிக்கெட் ஆகிய படங்கள் மூலம் இவர் பிரபலம் ஆனார். இந்தநிலையில் இப்போது இவர் மீது ஒரு பரபரப்பு புகார் எழுந்துள்ளது. பஞ்சாராஹில்ஸ் பகுதி போலீஸ் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் தொண்டு அமைப்பு ஒன்றின் மூலமாக அந்த புகாரை அளித்துள்ளார்.
அந்தப் புகாரில் அவர், "எனக்கு நடிகை தாரா சினிமாவில் வாய்ப்பு தருவதாக ஆசை காட்டினார். அதன்பேரில் என்னை வரவழைத்து, விபசாரத்தில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தினார். அவரிடம் இருந்து தப்பி வந்து இந்தப் புகாரை அளிக்கிறேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
அந்தப்புகாரின் மீது பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து நடிகை தாராவை கைது செய்து, முதற்கட்ட விசாரணைக்கு பின் நம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் வைத்தனர்.
தாராவிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் எத்தகைய லீலைகளை எல்லாம் நடத்தி வந்திருக்கிறார் என்பது அனைவரையும் வியப்பின் உச்சத்துக்கே அழைத்துச் செல்வதாக அமைந்துள்ளது.
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், கம்மவாரிபாலத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. தாரா சவுத்ரி என்ற பெயருடன் அவர் தெலுங்கு படவுலகில் நுழைந்தார். பல சிறிய பட்ஜெட் படங்களில் நடித்தார். அதன்பின்னர்தான் அவர் தனது லீலைகளை அரங்கேற்ற தொடங்கினார்.
இளம் அழகிகளை சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடித்தருவதாக ஆசை காட்டி அழைத்து வந்து, அவர்களை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தினார். தாராவிடம் எம்.பி., உள்ளிட்ட அரசியல்வாதிகள், முன்னாள் போலீஸ் டி.ஜி.பி., பணியில் உள்ள போலீஸ் துணை சூப்பிரண்டு, ஆந்திர தொழில் அதிபர், பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய புள்ளிகள் என சமூகத்தின் மேல்மட்டத்தில் உள்ள பலரும் வாடிக்கையாளர்கள் ஆனார்கள்.
அவர்களுக்கு விதவிதமான அழகிகளை சப்ளை செய்து, பணத்துடன் அவர்களின் நம்பிக்கையையும் சம்பாதித்தார்.
அழகிகளுடன் வி.ஐ.பி.க்கள் செக்ஸ் லீலையில் இருக்கும்போது அதை ரகசியமாக படம் பிடித்தார். அந்தப் படக்காட்சிகளை சம்மந்தப்பட்ட வி.ஐ.பி.க்களுக்கு காட்டி, மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்தார். அது மட்டுமல்ல. அதிகார வர்க்கத்தினர் என்றால் அவர்களிடம் இருந்து பல காரியங்களை சாதித்துக்கொண்டார்.
பல அரசியல்வாதிகள் தாராவிடம் இருந்து அழகிகளை வரவழைத்து, தாங்கள் காரியங்கள் சாதிப்பதற்காக உயர் அதிகாரிகள், மேலிட அரசியல் தலைவர்களுக்கு சப்ளையும் செய்துள்ளனர்.
பணமும், பெயரும் குவிந்தது. பெங்களூரில் நடிகை தாரா பெரிய பங்களா ஒன்றை வாங்கினார். அந்த பங்களாவிலும் தனது விபசார தொழில் எல்லையை விஸ்தரித்தார். பஞ்சாராஹில்ஸ் பகுதியில் ஒரு விருந்தினர் மாளிகையும் இவருக்கு இருக்கிறது.
நவீன தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த தாரா தவறவில்லை. இணைய தள ஆர்வலர்களை கவர்ந்திழுக்க அதன் வாயிலாக உல்லாசத்துக்கு அழைப்பு விடுத்து, வாடிக்கையாளர்களை பெற்றார்.
இந்தத் தகவல்கள் எல்லாம் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தநிலையில்தான் இப்போது வலையில் சிக்கிய திமிங்கலமாக, போலீசிடம் நடிகை தாரா அகப்பட்டுக்கொண்டார். அவரிடமிருந்து லேப்டாப் கம்ப்யூட்டர், ரகசிய கேமரா, ரகசிய டைரி, ஒரு பெட்டி நிறைய ஆணுறைகள், 8 செல்போன்கள், பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோ, 8 செல்போன்கள், 21 சிம் கார்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த ரகசிய டைரியில் பல பிரபலங்களின் போன் எண்கள் இடம் பெற்றுள்ளன. ஒரு ஆடியோ கேசட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த ஆடியோ கேசட்டில் ஒரு பிரபல தொழில் அதிபரிடம் அவர் பேசிக்கொண்டிருப்பதும், அவரிடம் ரூ..5 லட்சம் கேட்டதும் பதிவாகி உள்ளது.
இந்தநிலையில் நம்பள்ளி கோர்ட்டில் அவரை ஒரு வாரம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை அரசு தரப்பு வக்கீல் தாக்கல் செய்து கூறியதாவது:
"நடிகை தாராவை விரிவாக விசாரிக்க வேண்டி உள்ளது. அவர் மறைந்த முதல் மந்திரி டாக்டர் ராஜசேகர ரெட்டியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். அந்தப் படத்தை வைத்து அவர் தனது வாடிக்கையாளர்கள், பாதிப்புக்குள்ளானோரை மிரட்டி இருப்பதாக தெரிய வருகிறது. இதுகுறித்தெல்லாம் அவரிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. எனவே அவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தர வேண்டும்.'' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நடிகை தாராவை போலீஸ் காவலில் வைப்பது தொடர்பான மனு மீதான விசாரணையை நம்பள்ளி கோர்ட்டு நீதிபதி 10 ந் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்துள்ளார். இதற்கிடையே உளவுத்துறையினர் நடிகை தாரா பற்றிய தகவல்களை சேகரிக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.