பாரத ரத்னாவுக்கு தலைசிறந்த பேட்ஸ்மேனான சச்சின் தகுதியானவர்: விராட்கோக்லி
பெங்களூர் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணியின் நட்சத்திர வீரரும், இந்திய அணியின் துணை கேப்டனுமான விராட் கோக்லி பெங்களூரில் நேற்று அளித்த ஒரு பேட்டியில், நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவுக்கு தலைசிறந்த பேட்ஸ்மேனான சச்சின் தெண்டுல்கர் உண்மையிலேயே தகுதியானவர். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவர் அடித்துள்ள 100 சதங்கள் சாதனையை மற்ற யாரும் நெருங்க முடியாது. தனது 22 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் தெண்டுல்கர் படைத்து இருக்கும் சாதனைகள் செய்ய முடியாத காரியமாகும்' என்று தெரிவித்துள்ளார்.