மும்பை இந்தியன்ஸ் : 113 ரன்கள் வெற்றி இலக்கு
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. இதன்படி களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 36 ரன்களும், பிரேவோ 19 ரன்களும், விஜய் மற்றும் பத்ரிநாத் தலா 10 ரன்களும் எடுத்தனர்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றி இலக்காக 113 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.