7ந் தேதி ஆர்ப்பாட்டம்! விஜயகாந்த் அறிவிப்பு!
தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் ரூ.7,874 கோடி அளவிற்கு மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசின் மின்வாரியம் சார்பில் அளித்த பரிந்துரையை ஏற்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 1ந் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் இந்த மின் கட்டண உயர்வால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இக்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி வருகிற 7ந் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் உள்ள மின்வாரிய அலுவலகங்களின் முன்பு தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.