கூடங்குளம் : கைதான 178 பேரில் 138 பேருக்கு ஜாமீன்
கூடங்குளம் அணு உலையை திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் கூட்டப்புளியில் பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் கைதானவர்கள் அனைவரும் ஜாமீன் கேட்டு நெல்லை முதலாவது செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ராஜ் 178 பேரில் 138 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
40 பேர் மீது முந்தைய வழக்குகள் உள்ளதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட வில்லை.