கர்ப்பிணி மனைவிக்கு மாங்காய் பறித்து கொடுத்த கணவருக்கு உருட்டு கட்டை அடி
ஆனைமலை அருகே உள்ள மலையாண்டிப் பட்டணத்தை சேர்ந்தவர் இந்திரகுமார். இவரது மனைவி மஞ்சு. இவர் தற்போது கர்ப்பிணியாக உள்ளார். நேற்று கணவன் - மனைவி இருவரும் அங்குள்ள ஆத்துப் பாறை பகுதியில் ஆற்றுக்கு குளிக்க சென்றனர். ஆற்றங்கரை அருகில் மாமரம் உள்ளது. அதில் நிறைய மாங்காய்கள் காய்த்து தொங்கியது. இதனை பார்த்ததும் மஞ்சுக்கு மாங்காய் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதனை கணவர் இந்திரகுமாரிடம் கூறினார். கர்ப்பிணி மனைவி ஆசையாக மாங்காய் கேட்கிறாளே என நினைத்த இந்திரகுமார் அருகில் உள்ள மாந்தோட்டத்திற்கு சென்று மாங்காய் பறித்தார்.