சேலம்: கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற பீகார் வாலிபர் கைது
எர்ணாகுளம் பெங்களூர் இடையே செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் நேற்று (29.03.2012) மாலை 350 மணிக்கு சேலம் ரயில் நிலையத்துக்கு வந்தது. அந்த ரயிலில் ஏறுவதற்காக சேலத்தை சேர்ந்த சுல்தான் என்பவர் தயாரா நின்று கொண்டு இருந்துள்ளார்.
அப்போது, அந்த வழியாக வந்த ஒரு வாலிபர் சுல்தானிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். பயந்து போன சுல்தான் கூச்சல் போட்டுள்ளார். சுல்தானின் சத்தம் கேட்டு அந்த பக்கம் ஒடிவந்த ரயில்வே போலீசார் கத்தியை கட்டி மிரட்டிய வாலிபரை பிடித்து சேலம் ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில், அவர் பிகார் மாநிலம், நாலந்தா மாவட்டம், சோக்கரனா என்ற இடத்தை சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் சஜித் என்கிற பப்புகுமார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
அவரிடம், 79 ஆயிரம் ரொக்கப்பணம், 12 கிராம் எடையுள்ள உருக்கிய தங்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த பணமும் நகையும் எங்கிருந்து திருடப்பட்டது என்று போலீசார் பப்புகுமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.