2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை
மனைவியை வரதட்சனை கொடுமைப்படுத்தியதாகவும், முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாம் திருமணம் செய்த குற்றத்துக்காக தொடரப்பட்ட வழக்கில் வக்கீல், அவரது சகோதரர், சித்தப்பா, சின்னம்மா ஆகியோருக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மாவட்ட முதன்மை நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகரை சேர்ந்த வழக்குரைஞர் தமயந்தி என்பவரும், அரியலூர் மாவட்டம், அண்ணாமங்கலத்தை சேர்ந்த வழக்குரைஞர் முருகானந்தம் என்பவரும் கடந்த 2001 ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டாரும் இந்த திருமணத்துக்கு சம்மதிக்க வில்லை. இவர்களின் காதல் திருமணத்துக்கு இரண்டு பக்கத்திலும் எதிர்ப்பு இருந்ததால் முருகானந்தம் திருமணத்துக்கு பிறகு அரியலூர் செல்லாமல் இராசிபுரத்திலேயே வீட்டு எடுத்து தங்கியிருந்தனர். இந்த தம்பதியினருக்கு தமிழ் அமுதன் என்ற ஆன குழந்தையும் உள்ளது.
“ஆசை அறுபதுநாள்”, “மோகம் முப்பது நாள்”. என்ற கணக்குப்படி முருகானந்ததிற்கு தமயந்தி மீது இருந்த மோகம் குறைந்தது. பெற்றோர்களை பார்க்க அறியலூருக்கு அவ்வப்போது சென்று வந்த முருகானந்தத்திற்கு 2002 மார்ச் மாதத்தில், அவரது உறவினர்கள் ஏற்பாட்டின்படி தமயந்திக்கு தெரியாமல் அரியலூரை சேர்ந்த பரிமளா என்ற பெண்ணை இரண்டாம் திருமணமாக செய்து வைத்து விட்டனர்.
இதற்கிடையில் தன்னையும் அரியலூர் கூட்டி செல்லும் படி தமயந்தி முருகானந்தத்திடம் வற்புறுத்தி வந்துள்ளார். ஒரு இலட்சம் ரூபாய் பணம் கொண்டுவந்தால் மட்டுமே நாம் அரியலூர் செல்ல முடியும் என்ற சொல்லிவிட்டார் முருகானந்தம்.
முருகானந்தம் கேட்டபடி ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை கொடுத்த பின்னர், தமயந்தியை அறியலூருக்கு கூட்டிப்போயுள்ளார் முருகானந்தம். அங்கே, முருகானந்தத்தின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தமயந்தியை வீட்டுக்குள் விட மறுத்ததோடு, அவரை கட்டாயமாக இராசிபுரத்துக்கு திருப்பி அனுப்பிவிட்டனர்.
இது குறித்து வக்கீல் தமயந்தி இராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். முருகானந்தம் உட்பட பத்து நபர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் மீது நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக பரபரப்பாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பை 28.03.2012 அன்று நீதிபதி வேலு அவர்கள் வழங்கினார். அந்த தீர்ப்பில், முருகானதம், அவரது தாயார் தனபாக்கியம், சித்தி ஜானகி, அவரது கானவர் தட்சிணாமூர்த்தி, முருகானந்ததின் சகோதரர் ரங்கநாதன் ஆகியோருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தன்டனையும், தலா ஐந்து ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
முருகானந்தத்தின் இரண்டாவது மனைவி பரிமளம் அவரது தந்தையார் ராஜமாணிக்கம், தயார் கமலம் ஆகியோருக்கு தலா ஆறுமாதம் சிறை தண்டனையும், ஐந்து ஆயிரம் பராதமும் விதித்தார்.
அத்தோடு கூடுதலாக முருகானந்ததின் முதல் மனைவி தமயந்தியின் மகனுக்கு பத்து லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறியுள்ளார்.
வக்கீல் ஒருவரால் கொடுக்கப்பட புகாரின் பேரில், வக்கீல் ஒருவரின் குடும்பத்துக்கு ஐந்து ஆண்டுகள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ள விபரம் அறிந்ததும் நாமக்கல் நீதிமன்றம் பரபரப்பாக காணப்பட்டது.