ஜாதி அரசியலில் நம்பிக்கை இல்லை: தேவேகவுடா
ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு ஜாதி அரசியலில் நம்பிக்கை கிடையாது என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறினார்.
பெல்காம் மாவட்டம் கோலிஹள்ளி கிராமத்தில் ஜனதா தளம் (எஸ்) கட்சி ஊழியர் கூட்டம் நடந்தது. கூட்டத்தை முன்னாள் பிரதமரும், கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:
மத சார்பற்ற கொள்கையில் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் ஜாதி அடிப்படையிலான அரசியலில் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது.
எனவே, அடுத்து வரும் பொதுத் தேர்தலில் மக்கள் அனைவரும் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தேவேகவுடா பேசினார்.