மே.வங்கம், பீகாரில் மிதமான நிலநடுக்கம்
மேற்குவங்கள், பீகார் ஆகிய மாநிலங்களில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் இல்லை என தகவல்கள் கூறுகின்றன. இந்திய நேபாள எல்லையில் மையம் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் லேசாக குலுங்கின. உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.