லஞ்சம்: மின்வாரிய செயற்பொறியாளர் கைது
5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்சார வாரிய செயற்பொறியாளரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள சிம்மநாயக்கன்பட்டி மின்சார வாரிய செயற்பொறியாளராக பணிபுரிபவர் செல்வராஜ். ரங்கநாதன் என்பவர், தனக்கு சொந்தமான கிணற்றில் மின்சார சர்வீஸ் பெயரை மாற்றி தர செல்வராஜை அணுகியுள்ளார். இதற்கு செல்வராஜ் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ரங்கநாதன், நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். அவர்கள் அறிவுரையின் பேரில், செல்வராஜிடம் ரங்கநாதன் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த நாமக்கல் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி (பொறுப்பு) சந்திரமௌலி தலைமையிலான அதிகாரிகள் செல்வராஜை கைது செய்தனர்.