தூங்கி கொண்டிருந்தவரை எழுப்பி கட்டையால் தாக்கி நகைகள் கொள்ளை
சிவகங்கை மாவட்டத்தில் ஸ்டுடியோ உரிமையாளரை ஒருவரை தாக்கி அவரது வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூரை சேர்ந்தவர் சங்கர் கணேஷ். இவர் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். சங்கர் கணேஷ் குடும்பத்தினருடன் இரவு தூங்கி கொண்டிருந்தபோது நள்ளிரவு 2 மணியளவில் வீட்டில் புகுந்த இரண்டு திருடர்கள் பீரோவை உடைத்து ஆறு பவுன் நகைகளை கொள்ளையடித்தனர்.
பின்னர் வீட்டின் முன்பக்க கதவை திறந்து சங்கர் கணேஷ் மற்றும் அவரது மனைவியை எழுப்பி, கட்டையால் தாக்கினர். மயக்கமடைந்த பின் இருவர் கழுத்திலும் இருந்த ஏழு பவுன் மதிப்பிலான தங்க செயினையும் பறித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.