ஐ.பி.எல். குறித்து முடிவு செய்யவில்லை: கிளார்க்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புனே வாரியர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த யுவராஜ்சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதால் வருகிற 4 ந்தேதி தொடங்கும் 5 வது ஐ.பி.எல். சீசனில் அவர் விளையாடவில்லை. இதையடுத்து அவரது இடத்திற்கு ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்கை சேர்க்க புனே வாரியர்ஸ் நிர்வாகம் முயற்சித்து வருகிறது. ஐ.பி.எல். போட்டியில் விளையாட தனக்கு அழைப்பு வந்திருப்பதை கிளார்க்கும் உறுதி செய்துள்ளார். ஆனால் இது குறித்து ஆலோசித்து வருவதாகவும், இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் கிளார்க் தெரிவித்து இருக்கிறார்.