சேனல் 4 நிறுவனத்திற்கு சென்னை கடற்கரையில் நன்றி தெரிவித்த தமிழர்கள்
இலங்கையில் நடந்த போர்குற்றம் மற்றும் இனப்படுகொலையை வெளி உலகிற்கு கொண்டு வந்து உலக நாடுகளை சிந்திக்க வைத்த சேனல் 4 நிறுவனத்திற்கு நன்றி தெரிவுக்கும் விதமாக தமிழர்கள் பலரும் சென்னை மெரீனா கடற்கரையில் கூடி 'நன்றி சேனல் 4' என்று பதாதைகளை ஏந்தி சேனல் 4 நிறுவனதிற்கு நன்றி முழக்கமிட்டனர். இந்த புகைப்படங்கள் அனைத்தும் மற்றும் இதை குறித்த காணொளி பதிவும் சேனல் 4 இலண்டன் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க உள்ளனர் இந்த குழுவினர்.