நடிகை திஷா பாண்டே மீது பட அதிபர் புகார்
நடிகை திஷா பாண்டே ஒரு பாடல் காட்சியில் நடிக்காததால், ரூ.20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஒரு பட அதிபர் புகார் செய்து இருக்கிறார்.
`தமிழ்ப்படம்' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், திஷா பாண்டே. இவர், `மயங்கினேன் தயங்கினேன்' என்ற புதிய படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தில், நிதின் சத்யா கதாநாயகனாக நடித்தார். எஸ்.டி.வேந்தன் டைரக்டு செய்தார். ராஜேஸ்வரி வேந்தன் தயாரித்து வந்தார்.
அதில், ‘’மயங்கினேன் தயங்கினேன் படத்தில் ஒரு பாடல் காட்சி தவிர மற்ற அனைத்து கட்ட படப்பிடிப்பும் முடிவடைந்தது. படத்தில் ஒரு முக்கியமான இடத்தில், ``கனவினில் நீயும் வந்து தோன்றிடாதே என்றே சொல்வேனே'' என்று தொடங்கும் பாடல் காட்சி இடம்பெற இருந்தது. இந்த பாடலை, யுகபாரதி எழுதினார்.
இந்த பாடல் காட்சியை படமாக்குவதற்காக, மிக பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டது.
படப்பிடிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், திஷா பாண்டே மட்டும் படப்பிடிப்புக்கு வரவில்லை. அவருக்கு போன் செய்து கேட்டபோது, மலேசியாவில் இருப்பதாகவும், சிங்கப்பூரில் இருப்பதாகவும் நாட்களை கடத்தி வந்தார். கடைசியாக கேட்டபோது, ``நான் பழைய மானேஜரை மாற்றி விட்டேன். புது மானேஜர் சொன்னால்தான் மும்பையில் இருந்து சென்னை வருவேன்'' என்று கூறிவிட்டார்.
அந்த புது மானேஜரை தொடர்புகொண்டபோது, அவர் போன் `சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. கடைசி வரை திஷா பாண்டே வராததால், திட்டமிட்டபடி பாடல் காட்சியை படமாக்க முடியவில்லை. இதனால், எங்களுக்கு ரூ.20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது’’என்று கூறியிருக்கிறார்.