அண்மைச் செய்திகள்
தி.மலை : கடத்தப்பட்ட சிறுமி கொலை || சென்னையில் 35 நீர்க்கோழிகள் சுடப்பட்டன : நரிக்குறவர் கைது || ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 6-ல் ஆர்ப்பாட்டம் || எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷாஜி ( படங்கள் ) || ஷாஜிக்கு ஒரு நாள் போலீஸ் காவல் || ராகுல் -43 : சத்யமூர்த்தி பவனில் மருத்துவமுகாம் ( படங்கள் ) || கலைஞர் - மமகவினர் சந்திப்பு ( படங்கள் ) || மதுரையில் அதிரடி : 500 விளம்பரப்பலகைகள் அகற்றம் || புதுக்கோட்டை விபத்து : பேருந்து ஒட்டுனர் கைது || புதுக்கோட்டை விபத்து ; சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு மாணவன் உயிரிழப்பு || சேலம் : கொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள் || 17 குழந்தைகளை கற்பழித்த காமுகனுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு || 8 மாணவர்கள் பலி : பொதுமக்கள் சாலைமறியல் ||
சனிக்கிழமை, 24, மார்ச் 2012
சசிகலா அண்ணன் மகன் மகாதேவனை தேடும் போலீசார்
......................................
மும்பை: கப்பலில் தீ: ஒருவர் பலி
......................................
ஊழல் செய்தால்...: அகிலேஷ் அரசு எச்சரிக்கை
......................................
போராட்டம் தேவையற்றது: நாராயணசாமி
......................................
தனி தெலுங்கானா கோரி தீக்குளித்த மாணவர் உயிரிழந்தார்
......................................
ராஜபக்சேவுக்கு எதிராக மொட்டை அடித்து போராட்டம்
......................................
கள்ளக்காதலனுடன் உல்லாசம்! கணவர் நேரில் பார்த்ததால் இளம்பெண் தற்கொலை!
......................................
இல்லாத நிதியில் ஏராளமான திட்டங்கள்; பூஜ்ஜியத்திலே ஒரு ராஜ்ஜியம்! எல்லாம் விளம்பர இன்பம்! கலைஞர்
......................................
விழுப்புரம்: மினி வேன் கவிழ்ந்து ஒருவர் பலி
......................................
நிர்வாண கோலத்தில் சிக்கிய கல்லூரி ஜோடிகள்
......................................
இனிவரும் தலைமுறைதான் முக்கியம்: அன்புமணி
......................................
தீப்பெட்டி ஆலையில் விபத்து: ஒருவர் பலி
......................................
திடீர் தேர்தல் வராது: சரத் யாதவ்
......................................
3வது அணி குறித்து பரிசீலனை: பிரகாஷ் கரத்
......................................
அடுத்த குறிக்கோள்...: முலாயம் சிங் பேச்சு
......................................
கட்சியின் செயற்குழு கலைப்பு: அகிலேஷ் அதிரடி
......................................
பெட்ரோல் விலை ரூ.8 வரை உயர்வு?
......................................
ரசிகரை அடித்த அப்ரிடி மன்னிப்புக் கேட்டார்!
......................................
அதிகாரப் பகிர்வே நிரந்தர தீர்வாக அமையும்! ராஜபக்சேவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம்!
......................................
கை கால்கள் முறிக்கப்படும் என பேச்சு! இலங்கை ஆட்சியாளர்களின் கொடூர மனத்திற்கு உதாரணம்!
......................................
MLA கடத்தப்பட்ட விவகாரம்: பேப்பர்களை கிழித்தெறிந்து சட்டசபையில் அமளி
......................................
எம்.எல்.ஏ., கடத்தல்: முதல்வர் அவசர கூட்டம்
......................................
ரசிகரை தாக்கிய அப்ரிடி
......................................
தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! உதவி தொடக்க கல்வி அலுவலர் சங்கம் முடிவு!
......................................
சச்சின், டிராவிட்டுக்கு பிரெட்லீ புகழாரம்
......................................
பழம்பெரும் மலையாள நடிகர் மரணம் (படம்)
......................................
வி.சி.கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு திருச்சி சிறையில் அடைப்பு!
......................................
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்களுக்காக தயாராகும் திருச்சி மத்திய சிறை! (படங்கள்)
......................................
திருமணத்துக்கு தடையாக இருந்ததால் கள்ளக்காதலியை கொன்றேன்! வாலிபர் வாக்குமூலம்!
......................................
கிரிக்கெட்டில் வெற்றி யாருக்கு என்பதில் தகராறு: திருப்பத்தூர் வாலிபர் மலேசியாவில் கொலை
......................................
மேடை சரிந்ததால் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் காயம்
......................................
சாதித்த பிறகே திருமணம்! அனன்யா முடிவால் ஆஞ்சநேயலு அதிர்ச்சி!
......................................
மக்கள் நலப்பணியாளர் தற்கொலை!
......................................
மாற்றுத் திறனாளிகளுக்கு நல்வாழ்வு திட்டம்: ஜெ. அறிவிப்பு
......................................
அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு இலங்கை செல்கிறது
......................................
இலங்கை தமிழ் அகதி குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை: ஜெ. அறிவிப்பு
......................................
ஸ்பெக்ட்ரம் :பிரதமர் மன்மோகன்சிங் மீது புகார்
......................................
என் மகளை கீழே தள்ளியதால் ரசிகரை தாக்கினேன்:அப்ரிடி விளக்கம்
......................................
ஐ.பி.எல். : சேப்பாக்கத்தில் நாளை டிக்கெட் விற்பனை
......................................
சென்னை : ஐ.பி.எல். கிரிக்கெட் துவக்க விழாவில் பிரபுதேவா நடனம்
......................................
கைதான வன்னியரசுவிடம் தொடர்ந்து விசாரணை
......................................
கலெக்டர் அலுவலகத்தில் மனைவி மாயம்: கணவர் போலீசில் புகார்
......................................
ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கும் வரி
......................................
மகளை வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற தாய் தந்தை கைது
......................................
ஒன்றை ஞாபகப்படுத்துகிறேன் : புலம்பும் ராஜபக்சே
......................................
முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: தா.பாண்டியன் கோரிக்கை
......................................
கலைஞருக்கு சட்டசபையில் இடம் ஒதுக்க வேண்டும்: சபாநாயருக்கு திமுக கடிதம்
......................................
ஆளும் கட்சி எம்.எல்.ஏ. கடத்தல்
......................................
ஆட்டோகிராப் கேட்ட ரசிகரை தாக்கினார் அப்ரிடி
......................................
டாக்டர்கள் மோதல் : நோயாளிகள் அதிர்ச்சி
......................................
சகதியில் சிக்கி பலியான மான் உடல் தகனம்
......................................
15 வயது சிறுவன் ஓட்டிய லாரி விபத்துக்குள்ளானது
......................................
5 ஆயிரம் லஞ்சம் :பெண் அதிகாரி கைது
......................................
அது எம்.ஜி.ஆர். காலத்தில் என்று நினைக்கிறேன் :ராமதாஸ் பேட்டி
......................................
அமெரிக்க பாடகி விட்னியின் சாவுக்கு காரணம் என்ன?
......................................
பிரதமர் இன்று தென்கொரியா செல்கிறார்
......................................
நாளை தர்ணா போராட்டம் : அன்னா ஹசாரே அறிவிப்பு
......................................
நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜிக்கு பால்கே விருது
......................................
அல்போன்சா முன்ஜாமீன் கேட்டு மேல்முறையீடு
......................................
இலங்கையை போர்குற்றவாளியாக்க இந்தியா முயற்சி செய்ய வேண்டும் :பொன்.ராதாகிருஷ்ணன்
......................................
நயன்தாராவுக்கு விருது :ரோசய்யா வழங்கினார்
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 24, மார்ச் 2012 (12:27 IST)
கலெக்டர் அலுவலகத்தில் மனைவி மாயம்:  கணவர் போலீசில் புகார்

சேலம் மாவட்டம், மேட்டூர் நகரை சேர்ந்தவர் சுலைமான் வயது-38, இவரது மனைவி ஆயிஷா. வயது-32, ஆயிஷா சேலத்தில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.

ஆயிஷா வேலைக்காக தினமும் மேட்டூரிலிருந்து பஸ்சில் சேலம் வந்து சென்று கொண்டுள்ளார்.. தற்போது ஆயிஷா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இன்று அவருக்கு குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் சொல்லியிருந்தனர்.

இந்நிலையில், தனது பேரு கால விடுப்புக்காக கூட்டுறவுத் துறையின் அதிகாரிகளிடம் விடுமுறை வாங்குவதற்காக ஆயிஷா நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் தனது கணவர் சுலைமானுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டுறவுத்துறை அதிகாரிகளை பார்க்க வந்துள்ளார்.


சுலைமான் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் உள்ள போர்ட்டிகோவில் நின்று கொண்டார். ஆயிஷா மட்டும் மேலே சென்று அதிகாரிகளிடம் விடுமுறை கடிதம் கொடுத்துவிட்டு வருவதற்காக கூறிவிட்டு மேலே படிகளில் ஏறி சென்றுள்ளார்.

மாலை 4-30 மணியாகியும் மேலே சென்ற ஆயிஷா திரும்பி வரவில்லை. நீண்ட நேரம் காணாமல் போனதால் தனது மனைவியின் செல்போனை தொடர்பு கொண்ட போது, அது “சுவிட்ச் ஆப்” செய்யப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுலைமான் மேலே சென்று ஆயிஷா சந்திக்க சென்ற கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடத்தில் விசாரித்துள்ளார். அதற்கு அவர்கள் ஆயிஷாவை நாங்கள் பார்க்கவில்லை என்று தெரிவித்தனர்.

      மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஐந்து அடுக்கு வளாகம் முழுவதும் தேடியும் ஆயிஷா கிடைக்கவில்லை. அவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது. ஆனாலும், ஆயிஷாவின் கணவர் சுலைமான் தொடர்ந்து இரவுவரை அந்த பகுதியிலேயே தேடிக்கொண்டு இருந்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரவு பாதுகாப்பு பணியை   மேற்கொண்டு வரும் போலீசார் சுலைமானின் பதட்டத்தை புரிந்து கொண்டு அவரை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் மேற்கண்ட விவரங்களை போலீசாரிடம் தெரிவித்து இருக்கிறார். இதையடுத்து இரவு 12 மணி வரை கலெக்டர் அலுவலக பகுதியிலேயே சுலைமானுடன், போலீசாரும் சேர்ந்து வளாகம் முழுவதும் தேடினார்கள்.

ஆனாலும் ஆயிஷாவை காணவில்லை. இதையடுத்து ஆயிஷாவை காணவில்லை என நகர காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. பிறகு மாநகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டு விடிய, விடிய ரோந்து சென்ற போலீசாரும் நிறைமாத கர்ப்பிணியான ஆயிஷாவை தேடினர்.

தொடர்ந்து அவரை பற்றியே மைக்கில் தகவல் கேட்டுக் கொண்டே இருந்தனர். இது குறித்து போலீசாரிடம் கேட்ட போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஒரு பெண்ணால் எப்படி தனியாக மூன்று மாடிப்படிகளை ஏறமுடியும்....? கட்டாயம் கணவனும் உடன் சென்றிருக்க வேண்டும்.

குழந்தை பிறப்பதற்கு முதல் நாள்வரை அந்த பெண் எப்படி வேலைக்கு  வரமுடியும்...? இப்படிப்பட்ட நிலையில், குடும்பத்தில் உள்ள பெண்கள் யாரும் உடன் வராமல் இருப்பார்களா...? இதுதவிர குடும்பத்தில் ஏதாவது பிரச்சனைகள் உள்ளதா என்று பார்க்க வேண்டும், எனவே இதுகுறித்து இன்று சுலைமானிடம் தனியாக விசாரணை நடத்தினால் தான் மேற்கொண்டு உண்மைகள் தெரியவரும் என்றனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண் மாயமான சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :