நயன்தாராவுக்கு விருது : ரோசய்யா வழங்கினார்
ஸ்ரீ கலா சுதா தெலுங்கு சங்கம் சார்பில் 14-வது உகாதி புரஸ்கார் மற்றும் மகிளா ரத்னா விருது வழங்கும் விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று நடந்தது. இதில் தமிழக கவர்னர் கே.ரோசய்யா தலைமை விருந்தினராக கலந்துகொண்டு கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
`ஸ்ரீராமராஜ்ஜியம்' என்ற தெலுங்கு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை நயன்தாராவுக்கு உகாதி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.
விழாவில், திருப்பதி தேவஸ்தானம் முன்னாள் தலைவர் டி.கே.ஆதிகேசவலு நாயுடு, சினிமா தயாரிப்பாளர் கே.பிரசாத், தூர்தர்ஷன் அதிகாரி ஜெயந்தி, ஓய்வுபெற்ற கூடுதல் டி.ஜி.பி. கே.வி.எஸ்.மூர்த்தி, ஸ்ரீ கலா சுதா தெலுங்கு சங்க நிறுவனத் தலைவர் பெத்திரெட்டி சீனிவாஸ் ஆகியோர் பேசினார்கள். பழம்பெரும் பின்னணிப் பாடகர் பி.பி.சீனிவாஸ் உள்பட ஏராளமானோர் விழாவில் கலந்துகொண்டனர்.