சங்கரநாராயண சுவாமி கோவிலில் விஜயகாந்த்
சங்கரன்கோவில் தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று முதல் 16-ந் தேதி வரை 6 நாள் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். அவருடன் மனைவி பிரேமலதாவும் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிக்கிறார். இதற்காக அவர்கள் இன்று மாலை சங்கரன்கோவில் சென்றார்கள்.
சங்கரநாராயண சுவாமி கோவிலுக்கு சென்று வழிபட்ட பின்னர் சுவாமி சன்னதியிலிருந்து விஜயகாந்த் பிரச்சாரத்தை தொடங்கினார். அவருடன் அவரது மனைவி பிரேமலதா மற்றும் தே.மு.தி.க.,இளைஞர் அணி செயலாளர் சுதீஸ் ஆகியோர் சங்கரன் கோவிலில் உள்ள சங்கரநாராயணன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.