ரயில் பயணிகள் ஓய்வெடுக்க ஏசி அறை
மதுரையில் ரயில் பயணிகள் ஓய்வெடுக்க குளிர்சாதன வசதிகொண்ட அறை நாளை முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த அறையில் ஒருமணி நேரம் ஓய்வெடுக்க கட்டணம் 10 ரூபாய். அதிகபட்சமாக 12 மணி நேரம் வரை ஓய்வெடுக்கலாம். மேலும் உயர்வகுப்பு பயணிகளுக்கான ஓய்வறையும் நாளை திறக்கப்பட உள்ளதாக மூத்த வர்த்தக மேலாளர் ஹோஷியர் சந்த் தெரிவித்தார்.