நாமக்கல்: திருமணத்திற்கு சென்ற 6 பேர் பலி
நாமக்கல் அருகே காரில் திருமணத்திற்கு சென்ற வக்கீல் குடும்பத்தினர் 6 பேர் தடுப்புச்சுவர் மோதிய விபத்தில் பலியாயினர்.
ஆத்தூரைச் சேர்ந்த வக்கீல் திருமூர்த்தி என்வரின் குடும்பத்தினர் 9 பேர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் திருமணத்திற்காக இன்று காலை காரில் சென்றனர். நல்லிப்பாளையம் அருகே பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த போது தடுப்புச்சுவரில் மோதி கார் தலைகுப்புற கவிழந்தது.
இதில் திருமூர்த்தி உள்பட 6 பேர் பலியாயினர். காயமடைந்தவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களி்ல் மூன்றுபேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நல்லிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.