காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்திக்காக பீகாரின் மதேபுரா மாவட்டத்தில் யாகம் நடத்தப்பட்டது.
இது குறித்து நாகர் பரிஷத் உறுப்பினரான விஷ்ணுதேவ் பிரசாத் யாதவ் என்பவர், ராகுல் காந்திக்காகவும் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறவும் இந்த யாகம் நடத்தப்பட்டது என்றார்.
ராகுலில் திருமணத் தடைகளை அகற்றவே இந்த யாகம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
யாதவின் இல்லத்தில் நடைபெற்ற இந்த யாகத்தைக் காண ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தது குறிப்பிடத் தக்கது.