ராவணன் மீண்டும் கைது
வேலூரை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி தாளாளர் ரவி என்பவர், வேலூர் மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரில் ராவணன் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் உதவியாளர் ஆறுமுகம் ஆகியோர் மணல் குவாரி நடத்த லைசென்ஸ் பெற்று தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய் பெற்றதாகவும், மணல் குவாரி லைசென்ஸ் பெற்றுத்தரவில்லை. இன்னும் இரண்டு கோடி ரூபாய் கொடுத்தால் லைசென்ஸ் பெற்றுத்தருவதாக கூறினர்.
என்னிடம் பணம் இல்லாததால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது மிரட்டல் விடுத்ததாகவும், தன் பணத்தை திருப்பி பெற்றுத்தருமாறும், ராவணன், ஆறுமுகம் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் புகாரில் கூறியிருந்தார்.
இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆறுமுகத்தை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இன்று ராவணனை மீண்டும் கைது செய்து வேலூர் முதலாவது மாஜீஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி ராவணனை 15 நாள் காவலில் வைக்க உத்தர விட்டு, 16ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.