ஜனார்தன ரெட்டியின் காவல் நீட்டிப்பு
சுரங்க முறைகேடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்தன் ரெட்டியின் நீதிமன்றக் காவலை மார்ச் 12 ம் தேதி வரை நீட்டித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சுரங்க முறைகேடு வழக்கு தொடர்பாக ஜனார்தன் ரெட்டி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதற்காக ஹைதராபாதில் இருந்து பெங்களூருக்கு அவர் இன்று அதிகாலை அழைத்து வரப்பட்டார்.