அண்மைச் செய்திகள்
ராமதாஸ் ஜூன் 13ம் தேதி அரியலூர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு || தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றுவதை எதிர்த்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்! || ஸ்பாட் பிக்சிங்: குருநாத் மெய்யப்பனுக்கு சம்மன் || சாரதா குழும டிவி சேனல்களை எடுத்து நடத்த அரசு திட்டம் || அக்னி நட்சத்திரம் : சென்னையில் 108 டிகிரி || வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு || மோனோ ரயில் திட்டம் செயலாக்கம் : ஜெ., ஆய்வு || திருமாவளவனுக்கு தடை: கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு || மருத்துவ கலந்தாய்வு தேதி மாற்றம் || சென்னை : கல்லூரியில் தீ விபத்து || யானை தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி || பெங்களூர் ஐஐஎம்-முக்கு வெடிகுண்டு மிரட்டல் || விழுப்புரத்தில் வி.சி. பிரமுகர் வெட்டி கொலை; வீடுகளுக்கு தீவைப்பு ||
வியாழக்கிழமை, 1, மார்ச் 2012
விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்: திருமா
......................................
கச்சத்தீவில் விழா: கடலுக்குச் செல்லத் தடை
......................................
வெளிநாட்டு நிதி உதவி: பா.ஜ கோரிக்கை
......................................
1000 பேர் உடல் உறுப்பு தான நிகழ்ச்சி
......................................
கோடைக்கால சிறப்பு ரயில்கள்
......................................
மறைந்த அதிமுக அமைச்சர் கருப்பசாமி சமாதியில் திமுக வேட்பாளர் அஞ்சலி: அவரது ஊரிலும் ஓட்டு சேகரிப்பு
......................................
ராஜபக்சேவுக்கு எதிரான மனு தள்ளுபடி
......................................
படமெடுக்க பத்திரிக்கையாளர்கள் முயற்சி: சசிகலா எதிர்ப்பு
......................................
கண்ணில் மருந்து விட சசிகலாவுக்கு அனுமதி அளித்த நீதிபதி
......................................
விடுதி வார்டன் கண்டிப்பு: செல்போனில் மிரட்டிய மாணவிகள்: நள்ளிரவில் மீட்ட போலீசார்
......................................
மாணவர்களுக்கு ஆபாசபடம் சப்ளை:ஒருவர் கைது
......................................
அனாதையாக நின்ற பைக்கில் தங்கம் வெள்ளி
......................................
குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம்! இரண்டு வருட சிறை தண்டனை!
......................................
மனைவியை ஆபாச படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டவர் மதுரை போலீசாரால் கைது
......................................
காதலித்து மணந்த பெண்ணை தீயில் எரியவிட்ட கணவன்: குடி குடியை கெடுத்தது
......................................
விபத்தில் மாணவன் பலி: சொகுசு பஸ் உடைப்பு
......................................
வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது
......................................
சூதாட்ட கிளப்புகளில் ரூ.5.8 லட்சம் பறிமுதல்
......................................
ஆசிட் குடித்த ஆசிரியர்: தரக்குறைவாக பேசிய அதிகாரியை கைது செய்யுமாறு முற்றுகை போராட்டம்
......................................
பெட்ரோல் விலைஉயர்வுஇல்லை: ஜெய்பால் ரெட்டி
......................................
திமுகவின் மூத்த தலைவர் எல்.பி.ராமர் மரணம்
......................................
இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்: மா.கம்யூ.,
......................................
ஆதரவும் இல்லை: எதிர்ப்பும் இல்லை: தா.பாண்டியன்
......................................
மாணவிக்கு சிகிச்சை: ஆசிரியர் கைது
......................................
மாணவியை கற்பழித்த வாலிபருக்கு 17 ஆண்டு ஜெயில்
......................................
சென்னை மாணவன் கடத்தலில் பிடிபட்ட வட மாநில சகோதரர்களின் தந்தை 5 பேரை சுட்டுக் கொன்றவர்
......................................
மாணவியிடம் தலைமையாசிரியர் சில்மிஷம்
......................................
மதுரையில் கட்டாய ஹெல்மெட் அமல்
......................................
அசாரூதினை கைது செய்ய வாரண்ட்! டெல்லி நீதிமன்றம் உத்தரவு!
......................................
கடத்தப்பட்ட மாணவன் மீட்பு: வடமாநில இளைஞர்கள் கைது: 5 துப்பாக்கிகள் 43 தோட்டாக்கள் பறிமுதல்
......................................
லாலு பிரசாத் மீது சி.பி.ஐ குற்றச்சாட்டு பதிவு
......................................
முல்லை பெரியாறில் புதிய அணை கட்டப்படும்: கேரள ஆளுநர் சட்டசபையில் பேச்சு
......................................
ஜப்பானில் நில நடுக்கம்
......................................
மம்தா பானர்ஜி உறவினருக்கு ஜாமீன் மறுப்பு
......................................
டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
......................................
தங்கம் விலை சவரனுக்கு ரூ.672 சரிவு
......................................
சங்கரன்கோவில்: 20 பேர் வேட்புமனு தள்ளுபடி
......................................
பணிநீக்கம் செய்யும் தமிழக அரசின் அரசாணை நகலை எரித்து மக்கள் நலப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
......................................
கோவா: 40 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு
......................................
உ.பி: 60 தொகுதிகளில் இறுதி கட்ட தேர்தல்
......................................
அண்ணன் உடலுக்கு தீவைத்த தம்பி கருகினார்
......................................
திருப்பதி கோவில் விடுதியில் விபசாரம்: 2 அழகிகள் தப்பி ஓட்டம்
......................................
அதிமுக எதுவுமே செய்யவில்லை: மா.கம்யூ., பிரச்சாரம்
......................................
படகு மீது கப்பல் மோதியதில் 2 மீனவர்கள் பலி
......................................
10ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் விற்பனை
......................................
நள்ளிரவில் தாலி செயினை பறித்த கொள்ளையனை மண்வெட்டியால் வெட்டி பிடித்த தாய் மகளுக்கு பாராட்டு (படம்)
......................................
வாசலில் விளையாடிய குழந்தை தொட்டியில் விழுந்து பலி: மின்தடையால் ஏற்பட்ட விபரீதம்
......................................
ரூ 1 கோடி கேட்டு கடத்தப்பட்ட மாணவன் மீட்பு
......................................
சங்கரன்கோவில்: வேட்புமனு தாக்கல் செய்ய மாட்டு வண்டியில் வந்த பா.ஜ., வேட்பாளர் (படங்கள்)
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: 33 பேர் மனுதாக்கல்: வேட்பு மனுக்கள் அனைத்தும் இன்று பரிசீலனை
......................................
திருமணமான 4 நாளில் மனைவி மாயம்: கணவன் புகார்: காதலனுடன் ஓட்டமா என போலீசார் விசாரணை
......................................
டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரம் அதிகரிப்பு: சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கு வழிவகுக்கும்: ராமதாஸ்
......................................
நாய்கள் கடித்து குதறியதால் பச்சிளம் பெண் குழந்தை இறந்த பரிதாபம்: முறை தவறிய காதலா எனபோலீசார் விசாரணை
......................................
மு.க.ஸ்டாலினின் 60வது பிறந்தநாள்: கலைஞரை நேரில் சந்தித்து ஆசிபெற்றார்
......................................
மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் வாழ்த்து
......................................
சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு தொடங்கியது
......................................
உறவினரை கைது செய்ய உத்தரவிட்ட மம்தா
......................................
நதிநீர் இணைப்பு தொடர்பான எந்தவித திட்டத்தற்கும் கேரள அரசு ஒத்துழைப்பு வழங்காது: உம்மன் சாண்டி
......................................
அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கிறோம்: திருமணமான ஜோடி வழக்கு: பிரிக்கக்கூடாது என ஐகோர்ட் உத்தரவு
......................................
காதலனுடன் மகள் ஓட்டம்: பெற்றோர் தற்கொலை
......................................
ஆஸ்பத்திரிக்கு வந்த வாய் பேச முடியாத பெண் கற்பழிப்பு: டாக்டர் மீது புகார்
......................................
மாணவியுடன் உல்லாசம்: நண்பர்களுக்கும் விருந்தாக்கி படம் எடுத்து மிரட்டிய பேராசிரியர் கைது (படம்)
......................................
ஒருநாள் கிரிக்கெட் தர வரிசை: இந்திய அணிக்கு பின்னடைவு
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 1, மார்ச் 2012 (11:5 IST)



நள்ளிரவில் தாலி செயினை பறித்த கொள்ளையனை மண்வெட்டியால் வெட்டி பிடித்த தாய் மகளுக்கு போலீஸ் பாராட்டு


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள பி.உடையூர் கிராமத்தை சேர்ந்தவர், தாமோதரன் (வயது 40). இவர் தனது வீட்டு முன்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி (35). நேற்று முன்தினம் தாமோதரன் வியாபாரத்தை முடித்து விட்டு மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு சென்று விட்டார்.


வீட்டில் அவருடைய மனைவி ராஜலட்சுமி, மகள்கள் ஜெயப்பிரியா (20), சிவரஞ்சினி (18) ஆகிய 3 பேரும் இருந்தனர். சிவரஞ்சனி, சிதம்பரம் பெண்கள் மேல் நிலைப்பளிளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த ஆண்டு திருமணம் நடந்த ஜெயப்பிரியா, பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்திருக்கிறார். 3 பேரும் இரவில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில், கொள்ளையர்கள் 2 பேர், வீட்டின் மாடிப்படி வழியாக பக்கவாட்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.


கொள்ளையர்களில் ஒருவன், ராஜலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 71/2 பவுன் தாலி செயினையும், மற்றொருவன் காதில் கிடந்த தோட்டையும் இழுத்தனர். திடுக்கிட்டு விழித்த ராஜலட்சுமி தாலி சங்கிலியை கையால் பிடித்துக் கொண்டு சத்தம் போட்டார். தாயாரின் சத்தம் கேட்டு விழித்த மாணவி சிவரஞ்சனி மின் விளக்கை எரியவிட்டார்.


உடனே கொள்ளையர்கள் சிவரஞ்சனியை கீழே தள்ளி மானபங்கம் செய்ய முயன்றனர். சுதாரித்து எழுந்த ராஜலட்சுமி கொள்ளையர்களை பிடித்து தள்ளினார். ராஜலட்சுமியையும் மானபங்கம் செய்ய முயன்ற அவர்கள், சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள்.



அப்போது சமயோசிதமாக செயல்பட்ட மாணவி சிவரஞ்சனி, கொள்ளையன் ஒருவனின் முகத்தில் ஒரு துண்டைப் போட்டு மூடி கழுத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டார். இதனால் அவனால் தப்பி ஓட முடியவில்லை.


சத்தம் கேட்டதும் பக்கத்து வீட்டில் வசித்த சிவரஞ்சனியின் பெரியப்பா மகன் மோகன், அருண்குமார் மற்றும் சிலர் ராஜலட்சுமியின் வீட்டிற்கு வந்தனர். கதவு உள்புறமாக தாளிடப்பட்டு இருந்ததால், அவர்களால் உடனடியாக உள்ளே செல்ல முடியாமல் கொள்ளையர்களை எச்சரித்து சத்தம் போட்டனர்.


உடனே தாலி செயினை மட்டும் பறித்துக் கொண்ட கொள்ளையன் வெளியே தப்பி ஓடினான். மற்றொருவனும் அவனுடன் ஓட முயன்றபோது ராஜலட்சுமி, கபடி வீராங்கனை போல் அவனுடைய காலை இறுகப் பிடித்துக் கொண்டதால் அவனால் தப்ப முடியவில்லை.


இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கொள்ளையன், கீழே கிடந்த அரிவாளை எடுத்து ராஜலட்சுமியை வெட்டுவதற்காக ஓங்கினான். இருப்பினும் அஞ்சாமல் போராடிய ராஜலட்சுமி கால் பிடியை விட்டு விட்டு அவனை அந்த அறைக்குள் வைத்து பூட்ட முயன்றார்.


அப்போது கொள்ளையன் மீண்டும் அவரை வெட்ட முயன்றார். உடனே சிவரஞ்சனி மீண்டும் கொள்ளையனுடைய கழுத்தை இறுகப்பிடித்துக் கொண்டு அவனால் தாக்க முடியாமல் தடுத்துவிட்டார். அந்த நேரத்தில் தனது உயிரை துச்சமென கருதிய ராஜலட்சுமி அருகில் கிடந்த மண் வெட்டியை எடுத்து அவனை வெட்டினார்.


சட்டென்று அவன் கீழே குனிந்ததால் கொள்ளையனின் தலையில் மண் வெட்டி வெட்டு விழுந்து ரத்தம் சொட்டச் சொட்ட கீழே விழுந்தான். அவனை தாயும் மகளும் பிடிப்பதற்குள் சுதாரித்து எழுந்த கொள்ளையன் வெளியே ஓட முயன்றபோது வீட்டின் நிலைப்படியில் மோதி தலையில் அடிபட்டு மீண்டும் கீழே விழுந்தான்.



உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுடன் சேர்ந்து தாயும் மகளும் கொள்ளையனை மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். புவனகிரி போலீசார் கொள்ளையனை கைது செய்து சிகிச்சைக்காக அவனை சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக கடலூர் ஆஸ்பத்திரிக்கு அவன் மாற்றப்பட்டான்.


போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டினுள் புகுந்து சிக்கிக் கொண்ட கொள்ளையன், நாகை மாவட்டம் சீர்காழி மணல்மேடு கிராமத்தை சேர்ந்த மணி என்பவரது மகன் முருகன் (வயது 41) என்று தெரிய வந்தது.


அவனுடன் வந்து தாலி செயினுடன் தப்பி ஓடிய மற்றொரு கொள்ளையன், தஞ்சை மாவட்டம் திருவைபாடி கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் அருள் என்று தெரிய வந்தது. இருவரும் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பழைய குற்றவாளிகள் ஆவர்.


வீடு புகுந்து தாலி செயினை பறிப்பதற்கு முன்பு வீட்டின் முன்புறம் உள்ள மளிகைக் கடைக்குள் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் அவர்கள் திருடி உள்ளனர்.


தப்பி ஓடிய அருளை பிடிப்பதற்கு தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு உள்ளது.


கொள்ளையர்களுடன் துணிச்சலாக போராடியதுடன், மண் வெட்டியால் வெட்டிச்சாய்த்து கொள்ளையன் ஒருவனை மடக்கிப் பிடித்த ராஜலட்சுமியையும் அவருடைய மகள் சிவரஞ்சனியையும் பாராட்டி, வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சைலேந்திரபாபு அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(14)
Name : subash Date :3/1/2012 7:45:04 PM
சூப்பர்........ பொண்ணுக ஆனைவரும் இப்படித்த தைரியம்மா இருக்கணும்
Name : neethi Date :3/1/2012 7:23:05 PM
பயந்து அஞ்சா பெண்களின் திடமான வீரம் சமயோசித புத்தி எல்லாம் பாராட்டுக்குரியது இப்படியான வீராங்கனைகளை பாராட்டும் காவல் அதிகாரி அவர்களும் பாராட்டுக்குரியவரே, என்றும் படுக்கையில் மறைவாக சில ஆய்தங்களை வைத்து படுப்பது இது போன்ற தருணங்களில் கொள்ளையர்களை போட்டுத்தாக்க கைகொடுக்கும்., தயவு செய்து இந்த மாதிரி விடயங்களுக்குள் மனிதவுரிமை ஆய்வாளர்களை இழுக்காதீர்கள் அன்பர்களே ,நீங்கள் குற்றமற்றவராக இருக்கும் பட்சத்தில் சட்டத்தை கையிலெடுத்துக்கொண்டு அல்லது தன்னிச்சையாக திமிருடன் ஒரு காவல் அதிகாரியோ காவலரோ உங்களை அடித்தால் அவமானப்படுத்தினால் அத்தருணங்களில் நீங்கள் மனித உரிமை ஆய்வகத்தினரிடம் தாராளமாக முறையிடலாம் அடித்தவருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.ஆதலினால் மனித உரிமை அவசியம் எல்லோருக்கும்.
Name : dhanalakshmi Date :3/1/2012 3:47:52 PM
பெண்கள் துணிச்சலுடன் செயல்பட்டது பெருமைக்குரியது.
Name : dhanalakshmi Date :3/1/2012 3:47:28 PM
பெண்கள் துணிச்சலுடன் செயல்பட்டது பெருமைக்குரியது.
Name : radardawood saudiarabia Date :3/1/2012 3:24:22 PM
சீரியல் பார்த்து அழும் பெண்கள் இதை முதலில் படிக்கவேண்டும், வீரத்தாய்க்கு என் வாழ்த்துகள் .
Name : RAMASAMI Country : India Date :3/1/2012 2:56:19 PM
வீர மங்கை வாழ்க
Name : Natarajan Country : Australia Date :3/1/2012 2:13:46 PM
திருடனை உயிரோடு பிடித்ததற்கு பாராட்டுகள்.
Name : kumar Country : United States Date :3/1/2012 1:53:55 PM
சபாஷ் sailandrababu உமது பாராட்டு தொடரட்டும்
Name : saravanan Country : Australia Date :3/1/2012 1:46:03 PM
வெரி வெரி good
Name : dhas Date :3/1/2012 1:43:49 PM
சூப்பர் மேடம்
Name : koomapatti Muthiah Country : India Date :3/1/2012 1:32:21 PM
கொல்லையுருக்கும் கொலைகாரளுக்கும், பெண்பித்தருக்களுக்கும் உங்கள் அறிக்கை சப்போட்டாக அமையும் என்று நேற்று என் கருத்தை கூறினேன் இன்று அவ்வாறே நடந்து விட்டது.கொள்ளையர்களுடன் துணிச்சலாக போராடியதுடன், மண் வெட்டியால் வெட்டிச்சாய்த்தது என் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.
Name : kumar Country : India Date :3/1/2012 12:48:56 PM
மனித உரிமை கழகம் இப்போ போயி இந்த வீரங்கனையீடம் போயி விசாரிக்க சொல்லுங்க வீசாரணை பண்ணி திருடர்களுக்கு சன்மானம் கொடுக்க சொல்லுங்க்க
Name : Y Sriprakash Country : India Date :3/1/2012 12:25:36 PM
கிரேட் சோப். congrats
Name : Komappatti Muthiah Country : India Date :3/1/2012 11:50:26 AM
மனித உரிமைக்கழகம் பாராட்ட போகிறதா அல்லது விசாரணைக்கு போகிறதா சொல்லுங்க ........