ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகளின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
இதன்படி ஆஸ்திரேலிய அணி 129 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் முத்தரப்பு தொடரில் 3 ஆட்டத்தில் வெற்றி கண்டதுடன், 4 ஆட்டத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி (117 புள்ளிகள்) தர வரிசையில் 2 வது இடத்தில் இருந்து 3 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி (118 புள்ளிகள்) 3 வது இடத்தில் இருந்து 2 வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. இலங்கை அணி (113 புள்ளிகள்) 4 வது இடமும், இங்கிலாந்து (111 புள்ளிகள்) 5 வது இடமும், பாகிஸ்தான் (104 புள்ளிகள்) 6 வது இடமும், நிழூசிலாந்து அணி (87 புள்ளிகள்) 7 வது இடமும் வகிக்கின்றன.