சங்கரன்கோவிலில் போட்டியிடலாமா? டாக்டர் கிருஷ்ணசாமி ஆலோசனை
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி,’’சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்தாலும், உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது. சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. முன்கூட்டியே வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது.
சங்கரன்கோவில் தொகுதியில் புதிய தமிழகம் கட்சிக்கு வலுவான வாக்கு வங்கி உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடலாமா? என்பது குறித்து 23, 24 ஆகிய தேதிகளில் தொகுதிக்கு உட்பட்ட 3 ஒன்றியங்களில் உள்ள கிராமந்தோறும் சென்று புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் தொகுதி மக்களின் கருத்தறிய உள்ளேன். அதன் பின் முடிவு அறிவிக்கப்படும்’’ என்று கூறியுள்ளார்.