சாமியார் மீது யுவராஜ்சிங் தந்தை குற்றச்சாட்டு
யுவராஜ் சிங்கிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டபோது, 6 மாதங்களுக்கு முன்பே அமெரிக்கா சென்று சிகிச்சை பெற முடியாமல், ஒரு மருத்துவரும், கடவுள் என்று கூறிக் கொள்ளும் சாமியார் ஒருவரும் யுவராஜ் சிஙகை தவறாக வழி நடத்தி எல்லாம் சரியாகிவிடும் என்று கூறி வந்ததாக யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் கூறியுள்ளார்.
இந்த நோயை தானே சரி செய்து விடுவதாக ஒரு மருத்துவர் யுவராஜுக்கு சிகிச்சை அளித்து வந்ததாகவும், எல்லாம் தானாகவே சரியாகிவிடும் என்று பாபா என்று கூறிக் கொள்ளும் ஒரு சாமியார் யுவராஜை மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவிடாமல் தடுத்து வந்ததாகவும் கூறியுள்ள யோக்ராஜ், நல்லவேளையாக யுவராஜ் தற்போது அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வருகிறான் என்று கூறியுள்ளார்.