கத்தியை காட்டி மிரட்டி 15 பவுன் நகை பறிப்பு சென்னை புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (45). இவரது மனைவி நாகபூஷணம் (40). இவர் தண்டையார் பேட்டை சோலையப்பன் தெருவில் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார்.
சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் பியூட்டி பார்லரை பூட்டி விட்டு தனது 2 சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். வண்ணாரப்பேட்டை அப்பாசாமி தெரு வழியாக வந்து கொண்டிருந்தார். அப்பகுதி இருட்டாக இருந்தது. அப்போது, மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென நாகபூஷணத்தின் 2 சக்கர வாகனத்தின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டினர். மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தாலி சங்கிலி மற்றும் 7 பவுன் சங்கிலி ஆக மொத்தம் 15 பவுன் நகைகளை பறித்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து தண்டையார் பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.