வாக்கு கேட்க காங்கிரஸ் கட்சி வெட்கப்பட வேண்டும்: மாயாவதி
வளர்ச்சியின் பெயரால் வாக்கு கேட்க காங்கிரஸ் கட்சி வெட்கப்பட வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி தெரிவித்துள்ளார்.
சோன்பத்ரா பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மாயாவதி, காங்கிரஸ் கட்சி 40 ஆண்டுகாலம் உத்தரப்பிரதேசத்தை ஆண்டபோது மாநிலத்தை சீரழித்துவிட்டது.
உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சிக்காக ரூ.80 ஆயிரம் கோடி நிதியுதவி மாநில அரசின் சார்பில் மத்திய அரசிடம் கோரப்பட்டது. ஆனால் தரப்படவில்லை என்றார்.