அண்மைச் செய்திகள்
தி.மு.க. நகர செயலாளர் கொலை வழக்கில் சென்னை கோர்ட்டில் 3 பேர் சரண் || போலி வருமான வரித் துறை அதிகாரிகள் கைது || ஆப்பாயிலில் பெப்பர் குறைந்ததால் சமையல் மாஸ்டருக்கு அடி-உதை || 2014-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையைவிட செல்போன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் || கலெக்டர் ஆபிசுக்கு மண்எண்ணை பாட்டிலுடன் தீ குளிக்க வந்த தொழிலாளி: போலீசார் எச்சரித்து அனுப்பினர் || சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை! || சிலிண்டர் லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் சம்பவ பலி || தொடரும் யானை மரணங்கள்! (படம்) || வண்ணார் இன மக்களின் போராட்டம் (படம்) || அதிகாரிகள் மீது துப்புரவு பணியாளர்கள் புகார் (படம்) || மின்சாரம் தாக்கி உயிரிழந்த எருமை மாட்டுக்கு ரூ.70 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு || அகில இந்திய கபாடி போட்டி: தலா 1.5 லட்சம் முதல் பரிசுகள வென்ற ஆண்கள், பெண்கள் அணிகள் (படங்கள்) || ராமதாசை சந்திக்க மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்கவும்: கட்சியினருக்கு பாமக வேண்டுகோள் ||
ஞாயிற்றுக்கிழமை, 5, பிப்ரவரி 2012
இலவச மிக்சி, கிரைண்டர், பேன் திட்டத்திற்கு ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!
......................................
குடும்பத்துடன் கோலாலம்பூர் சென்றார் அழகிரி
......................................
கடும் பனி : 650 விமானங்கள் ரத்து
......................................
ஹசாரேவுக்கு ஆர்.எஸ்.எஸ். கேள்வி
......................................
இறுதிசடங்குக்கு பொருள் வாங்கி வைத்து தற்கொலை செய்து கொண்ட தம்பதி
......................................
எடையூரில் தொட்டில் குழந்தை திட்டம்
......................................
தீவிரவாத அச்சுறுத்தலால் சண்டிகரில் உஷார் நிலை
......................................
ஷாலிமார் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது
......................................
கர்ப்பிணி அடித்துக்கொலை : காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் பயங்கரம்
......................................
13-ந்தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் ஜெ.
......................................
3 புத்த மதத் துறவிகள் தீக்குளிப்பு
......................................
கேரளாவுக்கு எதிராக போராட்டம் :பெரியார் அணை மீட்புக் குழு முடிவு
......................................
வடலூர் 141வது ஜோதி தரிசன விழா
......................................
ஈரோடு, திருப்பூர் :1051 குற்றவாளிகள் தலைமறைவு
......................................
கோவை : 5 ஆயிரம் சிறு தொழிற்சாலைகள் மூடல்
......................................
பழங்குடியினர் நிர்வாண நடனம்; புதிய விடியோ
......................................
சீரடியில் கோத்தபய ராஜபக்சே
......................................
மாணவியை கத்தியால் குத்திய சக மாணவி
......................................
சிகிக்சைக்காக சிங்கப்பூர் செல்கிறார் ராஜபக்சே
......................................
தோற்றது ஏன்? : தோனி
......................................
மொரீஷியஸ் பிரதமர் நாளை இந்தியா வருகிறார்
......................................
சகாரா நிறுவனம் உறவு முறிவு: லலித்மோடி குற்றச்சாட்டு
......................................
ராகுல் அடுத்த பிரதமரா? பிரியாங்கா பதில்
......................................
யுவராஜ்சிங் புற்றுநோயால் அவதி : மோடி கவலை
......................................
கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங்கிற்கு புற்றுநோய் : அமெரிக்காவில் சிகிச்சை
......................................
எத்தனை அணிகள் திமுக.வில் இருந்தாலும் இளைஞர் அணிதான் சொத்து :மு.க.ஸ்டாலின்
......................................
ஓடும் பஸ்சில் தீ: 60 பயணிகள் தப்பினர்
......................................
சென்னை : குண்டர் சட்டத்தில் 31 ரவுடிகள் கைது
......................................
நெல்லையில் நடந்த காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் ( படங்கள் )
......................................
ஆ.ராசாவுக்கும் ப.சிதம்பரத்துக்கும் சமமான பங்கு உள்ளது ; பாஜக நிர்மலா சீதாராமன்
......................................
எடியூரப்பா மகன்களுக்கு கோர்ட் சம்மன்
......................................
ஜெயலலிதா அறிவிப்பு ; ராமதாஸ் வரவேற்பு
......................................
விஜயகாந்த் சஸ்பெண்ட் : கலைஞர் கருத்து
......................................
சச்சின் தெண்டுல்கருக்காக தனுஷ் புதிய பாடல்
......................................
பெப்சி தொழிலாளர்கள் உண்ணாவிரதம்: படப்பிடிப்புகள் முடங்கியது
......................................
கணக்கு தவறாக இருந்தால் கடும் நடவடிக்கை : ப. சிதம்பரம் பேச்சு
......................................
2ஜி வழக்கில் தீர்ப்பு: காங். மீது சந்திரபாபுநாயுடு தாக்கு
......................................
பெரிய மீனை விட்டு விட்டு சின்ன மீனை பிடிக்கிறார்கள் ; ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் புகார்
......................................
விஜயகாந்த் மீது காவல் நிலையத்தில் புகார்
......................................
விரைவில் வெளியாகிறது குரூப் 2, வி.ஏ.ஓ. பணியிட உத்தரவு
......................................
பாட்டியை நம்பினீர்கள்; தந்தையை நம்பினீர்கள்; இப்போது என்னை நம்புங்கள் : ராகுல்காந்தி பேச்சு
......................................
நுங்கம்பாக்க மனை பட்டா:அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
......................................
ஐ.பி.எல். வீரர்களுக்காக மட்டும் வளைந்து கொடுக்க சகாரா முடிவு
......................................
நடிகர் ரஜினி மீது எழுத்தாளர் சாரு நிவேதிதா கடும் தாக்கு
......................................
ஆதரவற்ற சடலங்களுக்கு மரியாதை தரும் லைப் டிரஸ்ட்!
......................................
திருநங்கைகளுக்கு அடையாள அட்டை!
......................................
பா.ஜனதா தலைவர்களுக்கு எடியூரப்பா `கெடு'?
......................................
கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்து 4 பேரின் உடல்கள் மீட்பு
......................................
முலாயம்சிங் மீது செருப்பு வீசிய பெண்
......................................
வன்னியரசு புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ( படங்கள் )
......................................
உலகத்திலேயே முதல் முறையாக தேவாலயத்தின் ஆயர் பணிக்கு திருநங்கை நியமனம்
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 5, பிப்ரவரி 2012 (8:9 IST)



உலகத்திலேயே முதல் முறையாக தேவாலயத்தின்
 ஆயர் பணிக்கு திருநங்கை நியமனம்


இந்தியாவிலேயே முதல் முறையாக தேவாலய ஆயர் பணிக்கு அரவாணி என்று அழைக்கப்படும் திருநங்கையை நியமனம் செய்வதற்கு தென்னிந்திய திருச்சபையின் (சி.எஸ்.ஐ.) சென்னை பேராயம் முடிவு செய்துள்ளது.


இறைப்பணியில் பல்வேறு அதிரடி முடிவுகளை தென்னிந்திய திருச்சபை எடுத்து வருகிறது. தேவாலயங்களில் ஆயர் பணிக்கு பெண்களை தென்னிந்திய திருச்சபை நியமித்தது.

தேவாலயங்களில் உள்ள பீடங்களில் முன்பு ஆண் ஆயர்கள் மட்டுமே ஏறி, திருச்சபை மக்களுக்கு பிரசங்கம் செய்து வந்தனர். தற்போது தமிழகத்தில் உள்ள பல தென்னிந்திய திருச்சபைக்குச் சொந்தமான தேவால யங்களில் பெண் ஆயர்களும் பீடங்களில் ஏறி இறை போதனை செய்கின்றனர்.

சி.எஸ்.ஐ.யின் சென்னைப் பேராயத்தின் மூலம் ஏழைகள், சிறுவர், இளைஞர், வயதானவர்கள் மத்தியில் பல்வேறு போதகர்கள் மூலம் இறைப்பணி செய்து வருகிறது. இந்த இறைப்பணி மூலம் ஆண், பெண் அனைவருமே பயனடைகின்றனர்.
 
ஆனால் திருநங்கைகளுக்கென்று (அரவாணிகள்) எந்த இறைப்பணியும் செய்யப்படவில்லை என்பதை பேராயர் தேவசகாயம் உணர்ந்தார். அவர்களையும் இறை வழிக்குள் நடத்த வேண்டும் என்பதற்காக, திருநங்கைகள் மத்தியில் இறைப்பணியை செய்ய ஆயர்களையும், போதகர்களையும் அனுப்பினார்.


அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணவாளன்நகர் சி.எஸ்.ஐ. தேவாலயத்தின் ஆயராக உள்ள கிறிஸ்டோபர் ரத்தினசாமி, திருநங் கைகளுக்கான இறை போதனையையும், அவர்களை மேம்படுத்தும் பணிகளையும் செய்து வருகிறார்.

திருநங்கைகளின் உணர்வுகளை நன்றாக அறிந்து அவர்களை இறை வழியில் நடத்திச்செல்வதற்கு அரவாணிகள்தான் மிகச்சரியாக இருப்பார்கள் என்பதால், சி.எஸ்.ஐ. திருச்சபையின் தேவாலயத்தில், திருநங்கைகளை ஆயராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

இதுபற்றி திருநங்கை பாரதி (25), ’’நான், தூத்துக்குடி கணேசபுரத்தை சேர்ந்தவள். எனது பெற்றோர் பெயர் பேச்சிமுத்து-பாப்பா. எனக்கு 2 அக்காள், ஒரு தம்பி உள்ளனர். 10-வது வயதில் நான் திருநங்கை என்பதை உறுதி செய்தேன். வீட்டிலிருந்து வெளியேறிய எனக்கு, பல கிறிஸ்தவர்கள் உதவி செய்தனர்.

இ.சி.ஐ. பேராயர் எஸ்றா.சற்குணம் தனது இறையியல் கல்லூரியில் `பேச்சலர் ஆப் தியாலஜி' படிக்க உதவி செய்தார்.

அந்த படிப்பை முடித்ததும், கடந்த ஆண்டு ஜுன் மாதம் என்னை செங்கல்பட்டு நடராஜபுரத்தில் உள்ள இ.சி.ஐ. தேவாலயத்தில் போதகராக நியமித்தார். நான் அந்த திருச்சபை மக்களுக்கு இறைபோதனை செய்து வருகிறேன்.


பாலியல் உறவுகள் தவறு என்பதை நான் சிறுவயதிலிருந்தே அறிந்திருந்ததால், சமுதாயத்தில் அதுபோன்ற தாக்குதல்களிலிருந்து தப்பினேன்.


வீட்டைவிட்டு வெளியே வந்தபிறகு, ஒரு தகுதியோடுதான் இனி வீட்டுக்கு செல்லவேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அதன்படி 2 மாதத்துக்கு முன்பு வீட்டுக்கு சென்று பெற்றோரை பார்த்தேன். என்னை அன்பாக அவர்கள் உபசரித்தனர். அவர்களுடன் ஒருநாள் பொழுதை கழித்தேன்.

திருநங்கைகள் தவறான பாதைக்கு செல்வதை தவிர்த்துவிட்டு, ஒரு கவுரவமான நிலையை எட்ட முடியும் என்பதற்கு நான் முன்உதாரணமாக இருக்க விரும்புகிறேன். நான் அணியும் வெள்ளை அங்கி, அது திருநங்கைகள் மத்தியில் நிச்சயமாக எதிரொலிக்கும் என்று நம்புகிறேன்’’என்று கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : suganthi Country : India Date :2/6/2012 5:31:20 PM
Praise the lord...ella manithargalum kadavulal padaikkapattavaragal...entha karaiyam kartharal vanthathu.........
Name : suganthi Country : India Date :2/6/2012 5:30:43 PM
Praise the lord...ella manithargalum kadavulal padaikkapattavaragal...entha karaiyam kartharal vanthathu.........
Name : boobathi Country : Oman Date :2/6/2012 1:35:11 PM
பாலியல் உறவுகள் ஏன் தவறு
Name : pillai Country : Canada Date :2/5/2012 11:17:45 AM
இதுபோல் சமுதாய பணிகளிலும் அவர்களை இணைத்து கொள்ளலாம் , மலேயாவில் ,தமிழ் அரவாணிகள் நல்லமுறையில் வாழ்கையை நடத்துவதாக ,சமூகநல அமைப்புகள் கூறுகின்றன ஆனால்... திருச்சபை ,அங்கீகரித்து ..போதகர் ஆக்கியமை "தமிழனுக்கு பெருமை தான்..
Name : abraham Country : Australia Date :2/5/2012 10:03:03 AM
கிறித்தவர்கள் மதமாற்றத்தை செய்யவில்லை, சமுக மாற்றத்தை செய்கிறோம் என்பதற்கு வலிமையான உதாரணம்,சமுக பணியோடு சேர்ந்த இறைபணி இந்தியாவில் அபார மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்.இ.சி.ஐ. பேராயர் எஸ்றா.சற்குணம், மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணவாளன்நகர் சி.எஸ்.ஐ. தேவாலயத்தின் ஆயராக உள்ள கிறிஸ்டோபர் ரத்தினசாமி,அவர்களுக்கு எமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்