Add1
logo
7 நாள் கழித்து அப்பல்லோவிலிருந்து வெளியே வந்த சசிகலா ( படங்கள் ) || அப்பல்லோவுக்கு வந்த ஓ.பி.எஸ்., தம்பிதுரை ( படங்கள் || ஜெ., நலமுடன் உள்ளார்: அப்பல்லோ அறிக்கை || தேசத்தை பாதுகாக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கையை ஆதரிப்போம்: சோனியா காந்தி || சென்னை மாநகராட்சி தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் || பேரிடர் மேலாண்மை ஆலோசனைக் குழு அமைக்க 2 மாத கால அவகாசமா?மு.க.ஸ்டாலின் கண்டனம் || திண்டுக்கல் மாநகராட்சி திமுக வேட்பாளர் பட்டியல் || சென்னை திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு || பெங்களூரில் பெண் ஓட்டுனர் தாக்கப்பட்டார்! || சகாபுதீன் ஜாமீனை ரத்து செய்ய கோரி மேல்முறையீடு; தீர்ப்பு ஒத்தி வைப்பு || எம்.எல்.ஏ. கண்ணில் மிளகாய்ப்பொடி தூவிய பெண் கைது || கீழடியில் கள அருங்காட்சியகம் ஒன்றை ஏற்படுத்திடுக: கலைஞர் || இதய மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம் ||
26, அக்டோபர் 2009
பிரதமர் கூறியது தவறு-பாஜக குற்றச்சாட்டு
......................................
தலாய் லாமாவுக்கு மத்திய அரசு அனுமதி
......................................
மத்திய அமைச்சர் வீட்டில் கொள்ளை முயற்சி
......................................
அமெரிக்கா அறிக்கை: இலங்கை கண்டனம்
......................................
நாளை இந்தியன்வங்கி ஊழியர்கள் உண்ணாவிரதம்
......................................
4லட்சம்குழந்தைகள் நிமோனியாவிற்கு பலியாகிறார்கள்
......................................
அமிதாப்,அமர்சிங் மீதான வழக்கு: அமர்சிங் பதில்
......................................
குமரியில் இருந்து திருச்சி வரை ஈழ பிரச்சார பயணம்:வைகோ,நெடுமாறன்,ராமதாஸ்,தா.பா. பங்கேற்பு
......................................
பெண்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்
......................................
கிளிக்:விளம்பரக்கம்பெனி மோசடி
......................................
திண்டுக்கல் போலீஸ்காரரின் கின்னஸ் முயற்சி
......................................
கல்லூரி மாணவரை சுட்டுக்கொன்ற ரவுடி கைது
......................................
திலீபன் திடலில் சீமான் பொதுக்கூட்டம்
......................................
கலைஞர் ஆர்ப்பாட்டம்; நெடுமாறன் கடும் தாக்கு
......................................
ஆண்களுக்கு ஆபத்து:பெண்கள் வழிபாடு
......................................
போர்க்குற்றவாளி என்று சரத்பொன்சேகாவை நிராகரித்த அமெரிக்கா
......................................
நடிகர் - நடிகைகள் மீதான வழக்கு:கோர்ட் தள்ளிவைப்பு
......................................
தலீபான்களின் மற்றும் ஒரு நகரம் பிடிபட்டது
......................................
பல மணி நேர சண்டை: 14 தீவிரவாதிகள் பலி
......................................
விலகி சென்றவர்கள் விலாசம் இல்லாமல் போவார்கள்: வைகோ பேச்சு
......................................
அத்துமீறிய இலங்கை மீனவர்கள் 17 பேர் கைது
......................................
நடிகை கே.ஆர்.விஜயா தாய் மரணம்: நடிகர்- நடிகைகள் அஞ்சலி
......................................
சென்னை ராயபேட்டையில் 7 லட்சம் கொள்ளை
......................................
ரிப்பன் மாளிகையில் அருங்காட்சியகம்
......................................
திமுக மாஜி எம்.பி. மீது இரா.கோபாலன் கடும் தாக்கு
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 26, அக்டோபர் 2009 (13:38 IST)
மாற்றம் செய்த நாள் :26, அக்டோபர் 2009 (13:38 IST)
ரூ.50 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் சென்னையில் பறிமுதல்

 
திருத்துறைப்பூண்டி திருக்கோயிலில் கொள்ளையடிக்கப்பட்ட சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள பழைமையான மரகத லிங்கம் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை கோயம்பேட்டில் விற்க முயன்ற இரண்டு வாலிபர்களையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சிலைகள் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி திலகவதி,

பண்டைய சோழர்கள் காலத்தில் வேதாரண்யம், திருக்குவழை, திருக்கரவாசல், திருவாரூர், திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருவாயுமூர் ஆகிய 7 இடங்களில் உள்ள திருக்கோவில்களில் விலைமதிப்பில்லாத மரகத லிங்கங்கள் வழிப்பாட்டிற்காக அமைக்கப்பட்டன.

இவற்றில் நாகப்பட்டினத்தில் உள்ள நீலாயதாட்சி அம்மன் திருக்கோயிலின் கோமேதக லிங்கம் 1992 ஆம் ஆண்டு திருடு போனது. அதே ஆண்டில் திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலிலும் மரகத லிங்கம் களவாடப்பட்டது. திருடு போன இந்த 2 லிங்கங்களும் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது.

இந்த நிலையில் திருத்துறைப் பூண்டி திருக்கோயிலில் இருந்த மரகதலிங்கம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19ந் தேதி கொள்ளை போனது. இது தொடர்பாக சிலைகள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். ஐஜி ராஜேந்திரன் மேற்பார்வையில் டிஎஸ்பி செல்வராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் காதர் பாட்சா உள்ளிட்டோரைக் கொண்ட போலீஸ் தனிப்படையினர் இது தொடர்பாக விசாரித்து வந்தனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் பட்டுக் கோட்டையை சேர்ந்தவர்கள் சென்னை கோயம்பேட்டுக்கு மரகதலிங்கம் விற்பனை செய்ய வருவதாக தகவல் கிடைத்தது. அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் மரகதலிங்கம் இருந்தது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அந்த லிங்கம் இவ்வாண்டு  பிப்ரவரி மாதம் திருத்துறைப்பூண்டி கோயிலில் கொள்ளை போன மரகதலிங்கம் தான் என்பதை அந்த கோயிலின் குருக்களும், நிர்வாகத்தினரும் வந்து பார்த்து உறுதி செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.50 கோடியாகும்.

இச்சிலையை விற்க முயன்ற பட்டுக்கோட்டையை சேர்ந்த ரமேஷ் (வயது 30), வலங்கைமானை சேர்ந்த செந்தில் (வயது 29) என்ற அந்த இரு வாலிபர்களையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களில் ரமேஷ் போலீஸ் ஜீப்பை எரிக்க முயன்ற வழக்கில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டவன் என்பதும், செந்தில் ஒரு கொலை வழக்கில் அதே சிறையில் அடைக்கப்பட்டவன் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு இவர்கள் இருவரும் திட்டமிட்டு இந்த சிலை திருட்டில் ஈடுப்பட்டுள்ளனர். சிலிண்டர் உருளையை வெட்டி அதில் இவர்கள் இந்த மரகதலிங்கத்தை மறைத்து வைத்திருந்துள்ளனர். போலியான விலாசங்களை கொடுத்து 13 சிம் கார்டுகள் இவர்கள் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சிலை திருட்டில் இவர்களுக்கு மூன்று அல்லது நான்கு கூட்டாளிகள் உதவி இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அவர்களையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று கூடுதல் டிஜிபி திலகவதி கூறினார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :