பி.ஆர்.பி. பழனிச்சாமியின் ரிமாண்ட் நீட்டிப்பு
கிரானைட் முறைகேடு தொடர்பாக, கைது செய்யப்ப்டடுள்ள பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன உரிமையாளர் பழனிச்சாமியின் ரிமாண்ட், செப்டம்பர் 07ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கிரானைட் கற்களை சட்டத்திற்கு புறம்பாக அதிகளவில் வெட்டியெடுக்கப்பட்டதில் மாநில அரசிற்கு ரூ. பல கோடி அளவிற்கு இழப்பு ஏற்படுத்தியதாக கூறி மதுரை பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன உரிமையாளர் பழனிச்சாமி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது ரிமாண்ட் இன்றுடன் முடிவடைந்த நிலையில், பலத்த பாதுகாப்புடன் மேலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பழனிச்சாமி இன்று ஆஜர்படுத்தப்பட்டார். ரிமாண்டை, செப்டம்பர் 07ம் தேதி வரை நீட்டித்து மாஜிஸ்திரேட் ஜெயக்குமார் உத்தரவிட்டார்.