ஜெயலலிதாவை சந்திக்கிறார் ஜஸ்வந்த் சிங்?
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஜஸ்வந்த் சிங் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி சென்னை வரவுள்ளதாக பா.ஜ., தெரிவித்துள்ளது. சென்னை வரும் ஜஸ்வந்த் சிங், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து துணை ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவளிக்கும்படி கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க., மற்றும் பிஜூ ஜனதா தள வேட்பாளரான சங்மாவை பா.ஜ., ஆதரித்ததையடுத்து, ஜஸ்வந்த் சிங்கை அ.தி.மு.க., ஆதரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.