எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு அலங்காரமாகத் திரிவது ஜனநாயகத்தின் நோக்கமல்ல: ப.சி.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே புளிச்சங்காடு கைகாட்டியில் கனரா வங்கியின் ஏ.டி.எம். கிளையை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.
அப்போது பேசிய அவர்,
மக்கள் பிரதிநிதிகளான எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு அலங்காரமாகத் திரிவது ஜனநாயகத்தின் நோக்கமல்ல. அடிப்படைத் தேவைகளைப் புரிந்துகொண்டு செயலாற்றுவதே நோக்கம்.
மத்திய அரசு மாநில அரசுக்குத் தேவையான அனைத்து நல திட்டங்களையும் செய்துவருவது மனசாட்சி உள்ளவர்களுக்குத் தெரியும். மனசாட்சி இல்லாதவர்களுக்கு ஒன்றும் செய்யாதது போலவே தெரியும். உணவு, உடை, உறைவிடம் போல் மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகத் திகழ்வது வங்கிச் சேவை. அந்த உரிமையை இங்கு மக்களுக்கு பெறச் செய்வதில் மகிழ்ச்சி என்றார்