விக்கிரவாண்டியில் விபத்து: 4 பேர் பலி
விக்கிரவாண்டி அருகே குவாலிஸ் கார், இருசக்கரவாகனத்தில் மோதுவதை தவிர்க்கும் பொருட்டு திரும்பிய போது எதிர்பாராதவிதமாக லாரியுடன் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியாயினர். பலியானவர்களில் 3 பேர், சவுதியில் பணியாற்றியவர்கள் என்பதும், சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.