அன்புமணி ராமதாஸ் மீது மேலும் ஒரு வழக்கு
இந்தூர் மருத்துவமனைக்கு முறைகேடு வழங்கியது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள ரோஹில்கநத் மருத்துவக் கல்லூரி தொடர்பான விவகாரத்தில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக, அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால், 2 மாதகால அளவில், அவர் மீது தாக்கல் செய்யப்படும் 2வது குற்றப்பத்திரிகை என்பது குறிப்பிடத்தக்கது.