தமிழகத்தில் 20 போலீஸ் அதிகாரிகள் மாற்றம்
தமிழ்நாட்டில் 20 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 15 ஏ.டி.எஸ்.பி.களுக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் ஆர்.ராஜகோபால் நேற்று பிறப்பித்த உத்தரவில், ’’தமிழ்நாட்டில் 13 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு பதவி உயர்வு அளிக்கப் பட்டுள்ளது. 7 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். பதவி உயர்வு பெற்றுள்ள கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விவரம் :
விழுப்புரம் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பி.பெருமாள், விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை எஸ்.பி.சி.ஐ.டி சிறப்புப் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, சென்னை எஸ்.பி.சி.ஐ.டி. சிறப்புப் பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
சென்னைப் பெருநகர மத்திய குற்றப்பிரிவு-2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மகேஸ்வரன், சென்னை வண்ணாரப்பேட்டை துணைகமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
தர்மபுரி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பி.சரவணன், சென்னை திருவல்லிக்கேணி துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
விருதுநகர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பி.சாமிநாதன், கோவை மாநகர தலைமையிடத்து துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். கிï பிராஞ்ச் சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு டி.கே.ராஜசேகரன், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
சென்னையில் உள்ள திட்டமிட்டு நடக்கும் குற்றங்களை தடுக்கும் நுண்ணறிவுப் பிரிவு (ஓ.சி.ஐ.யு.) கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஏ.ஜெயலட்சுமி, மதுரை குற்றப்பிரிவு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை தெற்கு பெருநகர போலீஸ், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆர். சிவக்குமார், சென்னை தியாகராய நகர் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
நாகப்பட்டினம் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு என்.மணிவண்ணன், திருநெல்வேலி சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். சேலம் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஐ.ஈஸ்வரன், வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
சென்னை ஐகோர்ட்டு கண்காணிப்புப் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பி.கண்ணம்மாள், நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் உள்ள தேசிய விசாரணை முகமை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மணி, அங்கேயே போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். கோவை குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு எஸ்.செல்வக்குமார், திருச்சி குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இடமாற்றம் செய்யப்பட்ட 7 போலீஸ் அதிகாரிகள் விவரம்:
சென்னை தியாகராய நகர் துணை போலீஸ் கமிஷனர் எம்.அசோக்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டு உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் தீக்ஷித் சென்னையில் உள்ள தமிழ்நாடு அதிரடிப்படை போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டு இருக்கிறார்.
திருவல்லிக்கேணி துணை போலீஸ் கமிஷனர் எஸ்.பாஸ்கரன், மதுரை தலைமையிடத்து துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஏ.கயல்விழி, சென்னை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டிருக்கிறார். நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சத்தியப்பிரியா, திருச்சி சட்டம், ஒழுங்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை தலைமையிடத்து உதவி ஐ.ஜி. பி.சாமுண்டீஸ்வரி, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டு இருக்கிறார். சென்னைப் பெருநகர மத்திய குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் ஏ.ராதிகா, சென்னைப் பெருநகர மத்திய குற்றப்பிரிவு-2 துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்’’ என்று கூறப்பட்டுள்ளது.