இந்து கோயில்களில் சாமி கும்பிட கட்டணமா? ரத்து கோரி ஆர்ப்பாட்டம்: இ.மு. மாநில அமைப்பாளர்
திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் நா.முருகானந்தம்,
இந்து கோயில்களில் சாமி தரிசனம் செய்ய கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்யக்கோரி வருகிற 22ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களிலும், ஒன்றிய தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கடந்த 2 மாதத்துக்கு முன்பு கோயில்களில் சுவாமி கும்பிட கட்டணம் வசூலிக்ககூடாது என வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தினோம். இந்த கையெத்துக்கள் அனைத்தும் ஆர்ப்பாட்ட தினத்தன்று கலெக்டர் மூலமாக தமிழக முதல்வருக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு முருகானந்தம் கூறினார்.