தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வணையத்தால் நடத்தப்படும் குரூப் 2 தேர்வுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இத்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஜூலை 13ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகஅரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3 ஆயிரத்து 631 பணியிடங்களை நிரப்ப குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வுக்கு 18 முதல் 30 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க தகுதியாக இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
மேலும் விரிவான தகவல்கள் அறிய http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.