சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை 15 நாள் சிறையில் அடைக்க திட்டம்?
அதிமுக அரசின் அடக்குமுறையை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று (04.07.2012) சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்தது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
சிறைநிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின், கொளத்தூரில் கைது செய்யப்பட்டார். பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் மற்றும் சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளில், தி.மு.க.வினர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளதாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை 15 நாட்கள் வரை சிறைக்காவலில் வைக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.