அண்மைச் செய்திகள்
சூதாட்டப் புகார்: தரகர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி || மேலூரில் 108 ஆம்புலன்சில் இரட்டை குழந்தை பெற்ற பெண் || பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும்: சரத் பவார் || மதுரையில் உள்ள கிளப்புகளுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை || காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை செயல்படுத்த கண்காணிப்பு குழு அமைப்பு || வீரப்ப மொய்லிக்கு உலக குடிமகன் விருது வழங்கி கவுரவித்தது தாய்லாந்து பல்கலைக் கழகம் || குருநாத் சென்னை அணியின் உரிமையாளர் இல்லை: இந்தியா சிமெண்ட் அறிவிப்பு || ஐதராபாத் விமான நிலையத்தில் சூதாட்ட புரோக்கர் கைது || 45 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான் || அமெரிக்க நீதிமன்ற நீதிபதியாக இந்தியர் || பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி || அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்! || சீனிவாசன் மீது லாலு குற்றச்சாட்டு ||
இலங்கை
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 25, ஜூன் 2012 (15:47 IST)



யுனெஸ்கோ ஆலோசகர் அசன் முகமது ஜின்னாவின் தமிழீழ ஆதரவுக் கடிதத்தை இழிவுபடுத்தும் இலங்கைப் பிரதிநிதி!


  ஐக்கிய நாடுகள் அவையின் யுனெஸ்கோ அமைப்பின் (மனித உரிமை தகவல் தொழில்நுட்பப் பிரிவு) ஆசிய பசிபிக் மண்டல ஆலோசகரான வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ஈழத்தில் வாழும் தமிழர்களின் நீண்டகால கோரிக்கையான தனித் தமிழீழத்தின் அவசியத்தை வலியுறுத்தியும், அதற்கு ஐ.நா.அவையின் மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டியதன் அவசியத்தை விளக்கி, பல நாடுகளிலும் உள்ள ஐ.நா. பிரதிநிதிகளுக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். போருக்குப் பிறகு அங்குள்ள தமிழர்களின் அவல நிலையையும், எடுக்கப்பட வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் பற்றியும் விளக்கியிருந்தார். இக்கடிதத்திற்குப் பதில் என்ற பெயரில் இலங்கையின் ஐ.நா. பிரதிநிதி திலுப் நானயக்காரா என்ற பெயரில் வன்மத்தை வெளியிட்டிருக்கிறார்.




இக்கடிதத்திற்குப் பதில் என்ற பெயரில் இலங்கையைச் சேர்ந்த பிரதிநிதி திலுப் நானயக்காரா என்ற பெயரில் வன்மத்தை வெளியிட்டிருக்கிறார். இலங்கையில் தமிழர்கள் மிகவும் நல்ல முறையில் வாழ்வதாகவும், போருக்குப்பிறகு ராஜபக்சே அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளால் தமிழ்ப் பெண்களும் குழந்தைகளும் நல்வாழ்வு பெற்றுள்ளதாகவும், தமிழர் பகுதிகளில் சிங்களக்குடியேற்றம் நடக்கவில்லை என்பதுபோலவும் தனது பதில் கடிதத்தில், திலுப் நானயக்காரா எழுதியிக்கிறார். அத்துடன், மகிந்த சிந்தனை என்ற பெயரில் ராஜபக்சே அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் வரவேற்பைப் பெற்றிருப்பதாகவும் கூறியுள்ளார்.


முள்ளிவாய்க்கால் படுகொலைகளும் அதன்பின்னர் முள்வேலி முகாம்களும் இலங்கையில் தமிழினத்தை அழித்த நிலையில், இலை சோற்றில் பூசணிக்காயை மறைக்க நினைக்கும் திலுப் நானயக்காரா, தன் கடிதத்தில் அசன் முகமது ஜின்னாவையும் அவரது நோக்கத்தையும் இழிவுபடுத்தும் வகையில்,  யுனெஸ்கோவின் ஆலோசகராக இருந்துகொண்டு,  தனித் தமிழீழத்திற்கு பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும் எனக் கோருவது நகைப்புக்குரியது, வெட்ககரமானது என்றும் எழுதி, உலகெங்கும் வாழும் தமிழர்களின் நியாயமான கோரிக்கையை அவமானப்படுததியுள்ளார்.



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : sivanandam arasan Date :6/26/2012 9:47:23 PM
வன்மையான கண்டனத்திற்குரியது!
Name : nageswaran Country : Malaysia Date :6/26/2012 3:58:08 PM
உலகத்தில் தனித்தமிழ் நாடு உருவாகினால்தான் தமீழம் பிறக்கும்.இந்தியாவை நம்பியது போதும்.
Name : அபுல் கலாம் Date :6/26/2012 2:20:19 PM
வன்மையான கண்டனத்திற்குரியது!
Name : Ravi-Swiss Date :6/25/2012 6:01:10 PM
ஓர் இன மக்களின் விடிவுக்காக குரல் கொடுக்கும் ஓர் நல் உள்ளத்தை' நகைப்பு வெட்ககரமானது' என்று அவமானப்படுத்துவது என்பது எவளவு கேவலமானது' ஆனால்' இதனை சிங்கள இனம் செய்யும்' அப்போ முள்ளிவாய்க்கால் கிராமத்தில்''?