டி.வி. தொடர்களால் தியேட்டரில் கூட்டம் இல்லை: தமிழ் சினிமாவில் இனி சூப்பர் ஸ்டார் இல்லை: நடிகர் ஷக்தி
டி.வி. தொடர்களால் சினிமா தியேட்டரில் கூட்டம் இல்லை என்று தெரிவித்த நடிகர் ஷக்தி, தமிழ் சினிமாக்களில் ரஜினி, கமல், விஜய், அஜீத் அதற்கு அப்புறம்சூப்பர் ஸ்டார் இல்லை என்று கூறினார்.
ஈரோட்டில் நடந்த பாராட்டு விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்த நடிகர் ஷக்தி அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தொட்டால் பூ மலரும், ஆட்டநாயகன், நினைத்தாலே இனிக்கும் ஆகிய படங்களில் நடித்துள்ளேன். அடுத்து ஏதோ செய்தாய் என்னை' என்ற புதிய படத்தில் நடித்துள்ளேன். இன்னும் சில தினங்களில் அந்த படம் திரைக்கு வந்து விடும்.
இது ஆக்ஷன் மற்றும் காதல் கலந்த கதை. அடுத்து வேஷம் என்ற புதிய படத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். பொதுமக்கள் இப்போது ஆக்ஷன் படத்தைத்தான் விரும்புகிறார்கள். அனுபவம் வந்த பிறகு அப்பாவைப்போல் புதிய படங்களை டைரக் செய்வேன். எனக்கு அரசியல் தெரியாது.
டி.வி.களில் வரும் தொடர்கள் நாடகங்கள் மற்றும் திருட்டு டி.வி.டி.யால் தான் தியேட்டருக்கு வரும் கூட்டம் குறைந்து உள்ளது. படிக்கும் போதே நடிக்கவேண்டும் என்றுதான் விரும்பி சண்டை மற்றும் நடனம் ஆடக்கற்றுக்கொண்டேன். வேலைக்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் இல்லை. என்னுடைய தந்தை பி.வாசு நடிக்கத்தான் வந்தார். ஆனால் அவர் இப்போது இயக்குனர் ஆகிவிட்டார். எம்.ஜி.ஆர் தான் எங்கள் குடும்ப தெய்வம். நடிகைகளில் எனக்கு பிடித்தவர் அனுஷ்கா. சிவாஜி நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன். ரஜினி மற்றும் கமலுடன் நடிக்க வேண்டும் என்று ஆசை எனக்கு உண்டு
இளம் கதாநாயகர்களில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடித்தால் அவர்களுடன் நடிக்கலாம். நான் புரிந்து நடிப்பேன். அதனால் தான் நினைத்தாலே இனிக்கும் படத்தில் பிரித்திவிராஜ் உடன் இணைந்து நடித்தேன்.
தமிழ் சினிமாக்களில் ஹீரோக்கள் அதிகம். அதனால் தமிழ்நாட்டில் இனி ரஜினி, கமல், விஜய், அஜீத் அதற்கு அப்புறம் சூப்பர் ஸ்டார் இல்லை. திறமை இருந்தால் தான் சினிமாவில் நிலைக்கமுடியும். தொடர்ந்து கிராமத்து கதை, நகைச்சுவை வேடங்களை தேர்ந்து எடுத்து நடிக்க உள்ளேன் என்றார்.