ஜெயலலிதாவை தலைவியாக கொண்டு இலங்கை மீது படையெடுங்கள்-ராஜபக்சேயை போரில் வெல்வார்:கலைஞர்
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவ்வறிக்கையில்,
’’டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் இலங்கைப் பிரச்சினையிலே எங்களை விடத் தீவிரமானவர்கள் என்று காட்டிக்கொள்ள - காலையிலே ஒரு அறிக்கை, மாலையிலே ஒரு அறிக்கை என்று வெளியிட்டுக் கொண்டிருக் கிறார்கள்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையை கைகழுவி விட்டோம் என்று கதைக்கிறார்கள்.
அவர்கள் வாதப்படி நாம் கை கழுவி விட்டவர்கள் - அல்லது கையாலாகாதவர்கள் - இவர்கள்தான் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றும் அந்தக் கருமமே கண்ணாயினார் என்ற நிலையிலே உள்ளவர்கள் ஆயிற்றே; இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்புக் குழுவிலே இருக்கின்ற இந்த வீராதி வீரர்கள், சூராதி சூரர்கள், ரண ரங்க மார்த்தாண்டர்கள் - முழங்கட்டுமே முரசம் - கொட்டட்டுமே பேரிகை.
இலங்கை நோக்கி இராணுவ அணிவகுப்பு நடத்தட்டுமே! ராஜபக்சேயை முறியடித்துத் திரும்பட்டுமே! இங்கே யார் குறுக்கே நிற்கிறார்கள்?
ஒரு நாள் பகல் இரவு 24 மணி நேரத்தில் - 20 மணி நேரம் தொகுதிப் பங்கீடு - அட்வான்சாக ராஜ்ய சபா - இப்படி பேரம் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினை என்றாலே ஒரு "வீரம் அல்லவா பொசுக்"கென வந்து விடுகிறது.
உடனே பூகம்பமாக வெடித்துப் புயலாக சீறி - மத்திய ஆட்சியிலே இருக்கும் காங்கிரஸ் மீதும் கனல் கக்குகிறார்கள் - தமிழகத்திலே இருக்கும் கழக ஆட்சி மீதும் தணல் கொட்டுகிறார்கள்.
அய்யா, வேண்டாமய்யா, இந்த வம்பு. நாளைக்கே தோணிகளை தயார் செய்யட்டும். அவை கள்ளத் தோணிகளாக இருந்தாலும் பரவாயில்லை.
அவற்றில் படைகளை ஏற்றிச் செல்லட்டும். கோழைகளாகிய (?) நாங்கள் கண் கொட்டாமல் அவற்றைப் பார்த்துக் களிக்கிறோம். கை தட்டி ஜெய கோஷம் போடுகிறோம்.
இந்த இலங்கை மீது படை யெடுப்புக்கு தலைவியாக ஜெயலலிதாவையும் ஏற்றுக்கொண்டு - அவரையும் அழைத்துச் செல்லுங்கள்.
அவர் நிச்சயமாக ராஜபக்சேயை போரிலே வென்று - அவரைக் கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வருவார்.
எச்சரிக்கை. அவர் தவறிப்போய் 2002ஆம் ஆண்டு சட்டமன்றத்திலே முதலமைச்சராக இருந்து முன் மொழிந்து நிறைவேற்றினாரே ஒரு தீர்மானம் - தளபதி பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வருவோமென்று - அதை நினைத்து ராஜபக்சேவுக்குப் பதிலாக பிரபாகரனை கைது செய்து விடப்போகிறார்.
எச்சரிக்கையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
| Name : tamilcanadian |
|
Date :3/27/2009 7:23:51 AM |
|
நீங்க இருந்து கவிதைவரையலாமே
|
| Name : MAARAN |
|
Date :3/26/2009 3:38:38 AM |
|
பழைய விசியத்தையே பேசி பேசி பிரயோஜனமில்லை என்பதை இவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும், மாறன் குடும்பத்தோடு இனி ஒட்டும் இல்லை உறவுமில்லைன்னு சொன்னது மட்டும் இப்ப என்னாச்சாம்??
|
| Name : kannan |
|
Date :3/26/2009 12:52:56 AM |
|
i am not support DMK OR ADMK BUT Jeyalalitha better then karunanithi.
|
| Name : kannan |
|
Date :3/26/2009 12:52:15 AM |
|
i am not support DMK OR ADMK BUT Jeyalalitha then karunanithi.
|
| Name : vanavil |
|
Date :3/25/2009 8:51:07 PM |
|
கலைஞருக்கு வரலாற்றில் முக்கிய இடம் உண்டு .
தமிழின துரோகி .
தமிழக மக்களுக்கு காவிரி நீர் பிரச்சனையிலும் கூட்டு குடிநீர் பிரச்சனையிலும் , ஈழ மக்களுக்கு காங்கிரஸ் உடன் சேர்ந்து இன அழிப்பு கொடூரத்தில் பங்களிப்பு
|
| Name : Sankar, Singapore |
|
Date :3/25/2009 3:48:52 PM |
|
இவரின் கை வந்த கலைகள் ரெண்டு..
1. அடுத்தவர்களை அதிக பட்சம் கிண்டல் செய்வது.
2. தலைவன் என்ற போர்வையில் நம்பிக்கை துரோகம செய்வது.
இது ரெண்டிலயும் இவருக்கு நிகர் இவர் தான்.
என் தமிழ் மக்கள் பாவம், இன்னும் இவரை பொறுத்து கொண்டுள்ளார்கள். இவரிருக்கும் வரை விடிவுகாலம் இல்லை.
|
| Name : nazzar |
|
Date :3/25/2009 2:02:43 PM |
|
if tamils lost this war(hope will not), next step is going to kick muslims from south,later east. After sinhala christians . This is mahinda sinthana. wait and see mansoor. wake up.
|
| Name : ravi |
|
Date :3/25/2009 1:50:28 PM |
|
ஒன்லி ஒன் பாமிலி வான்ட் ரிச் இன் தமிழ்நாடு. வதோ உ க்நொவ்.மர். மக் பாமிலி.
கருணாநிதி குட் அக்டோர். கருணாநிதி குட் கமடியன்ம்.ஓல்ட் மண் கோ டு டேக் சொமே ரெஸ்ட்???????
|
| Name : mansoor |
|
Date :3/25/2009 12:38:31 PM |
|
தமிழ் ஈழம் இஸ் இம்போச்சிப்லே த்ல்கேர் இஸ் வ்ரோங் பார்ட்டி ஒப் ஸ்ரீ லங்கன் போளிடிகால்ஸ்
மன்சூர்
குவைத்
|
| Name : A. Rajaram(Singapore) |
|
Date :3/25/2009 6:58:55 AM |
|
சரியாக சொன்னீர்கள்...........
|
| Name : tamilan |
|
Date :3/25/2009 4:11:31 AM |
|
mr.dear karunanithi how can he said these????? he like put his son in
power.................
|
| Name : MAARAN |
|
Date :3/25/2009 4:03:47 AM |
|
மக்கா தேர்தல் நெருங்க நெருங்க.....இனி என்னவெல்லாம் நடக்க போகுதோ தெரியவில்லை.ஆனால் ஒன்று நிச்சயம்.....ஈழத் தமிழருக்கு விடிவு நிச்சயம் வந்து விடும்....தமிழனே...தொடர்ந்து போராடு மக்கா...இதுதான் தருணம் இதை விட்டால்...இனி தருணம் கிடையாது என்பதையும் புரிந்
|
| Name : Nigaar-Germany |
|
Date :3/25/2009 2:51:42 AM |
|
கலைஞர் காமடி பலித்தால் எப்படியிருக்கும் ஜெ க்கு ஒரு சரித்திரமே பதிவாகும்
|
| Name : paris thayub |
|
Date :3/25/2009 1:55:06 AM |
|
கலைஞர் என்றால் அவருக்கு நிகர் அவர் தன் இந்த அறிக்கைக்கு என்ன பதில் சொல்ல முடியும் டாக்டர் மற்றும் அன்பு சகோதரி யாழும்
|
| Name : sugumaran abudhabi |
|
Date :3/25/2009 12:49:32 AM |
|
ஒரு நாட்டுக்கு ஒரு கொள்ளைகூட்டம் போதும் ஐயா இனி இவுங்கவேற போகணுமா?
|